Allu arjun: ஈகோ சண்டையால் தாமதமாகும் புஷ்பா.. வெளிநாடு பறந்த அல்லு அர்ஜூன்!

சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள 'புஷ்பா 2' இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி வெளியாகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் ஈகோ பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

2021ம் ஆண்டு வெளியனா 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அந்த படத்தில் கதைக்களம் அல்லு அர்ஜூனின் நடிப்பு, சமந்தா, ராஷ்மிகாவின் ஆட்டம் என படம் பட்டையை கிளப்பியது. படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மூன்று வருடமாக நடைபெற்று வருகிறது.

pushpa 2 allu arjun director Sukumar 2

புஷ்பா 2: முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா எப்படி, பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புகிறான் என்பது கதைக்களமாக காட்டப்பட்டது. இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்பது படமாக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தெலுங்கு சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நிறுவனம் பிரமாண்ட விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தாமதமாகும்: இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் தற்போது புதிய வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றி டிசம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

pushpa 2 allu arjun director Sukumar 2

ஈகோ சண்டை: முன்னதாக, படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை எனவும் முக்கிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை காரணமாக தாமதமாகியுள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார் இடையே ஏற்பட்ட ஈகோ சண்டை காரணமாக படம் மேலும் தாதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,அல்லு அர்ஜுன் தனது தாடியை ட்ரீம் செய்து விட்டு கேட்டப்பை மாற்றிவிட்டு ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. இதற்கிடையே படத்தின் இயக்குநர் சுகுமார் தனது குடும்பத்தினருடன் யுஎஸ் சென்றுள்ளாராம். இதனால் படத்தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 முறை ரீ டேக்: புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் 40 முறைக்கு மேல் சுகுமார் ரீ டேக் எடுத்தாராம். ஆனால் அப்போதும் அவர் எதிர்பார்த்த படி, எந்த விஷயமும் நடக்காததால், கோபத்தில் அவர் தனது காஸ்ட்லி ஐபோனை தூக்கி போட்டு விட்டு, செட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அல்லு அர்ஜூன் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X