அல்லு அர்ஜுன் முதல் மிருணாள் தாகூர் வரை.. அட்லீயின் ராக்கா படத்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?.. யப்பா

சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் பயணத்தை தொடங்கிய அட்லீ இப்போது இந்திய அளவில் சக்சஸ்ஃபுல் இயக்குநர். கடைசியாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றி கண்ட அவர்; அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற படத்தை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களது சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்அடுத்தியிருக்கிறது.

ஷங்கரிடம் வேலைகள் கற்றுவிட்டு; ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ வரிசையாக தமிழில் விஜய்யை வைத்து மட்டுமே படங்களை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய படங்களில் பிகில் தவிர்த்து அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன அல்லது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. வரிசையாக அவர் வெற்றியை கொடுத்தாலும்; அட்லீ சொந்தமாக கதையை யோசிப்பதே இல்லை; மற்ற படங்களிலிருந்து காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் வந்தது. அதற்கு அட்லீயும் ஏழு ஸ்வரங்களுக்குள்தான் இசை வருகிறது என தரமான பதிலடியை கொடுத்திருந்தார்.

Allu Arjun Atlee s Raaka Salaries Revealed Huge Paychecks Shock Fans
Photo Credit:

மேக்கிங் சூப்பர்: அதேசமயம் கதையை காப்பி அடித்தாலும் மேக்கிங்கில் பட்டையை கிளப்பிவிடுகிறார் என்ற பாராட்டும் எழாமல் இல்லை. அவர் வைக்கும் ஃப்ரேம்கள் எப்போதுமே ரிச்சாகவும், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் இருக்கும். அதனால்தான் ஒரு இயக்குநராக சினிமாவில் விமர்சனங்களை சந்தித்தாலும் நீடிக்க முடிகிறது என்று பலர் சொல்வதுண்டு. தமிழில் விஜய்யை தவிர்த்து வேறு யாருடனும் பணியாற்றமாட்டாரா என்று கேள்வி எழும் அளவுக்கு விஜய்யின் குட் புக்கில் இருந்தார்.

Also Read
நெருங்கும் கருப்பு படம் ரிலீஸ்.. இலங்கைக்கு சென்ற சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி.. யப்பா வேற லெவல் வரவேற்பு
நெருங்கும் கருப்பு படம் ரிலீஸ்.. இலங்கைக்கு சென்ற சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி.. யப்பா வேற லெவல் வரவேற்பு

ஹிந்தியில் அட்லீ: இப்படிப்பட்ட சூழலில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கோலிவுட்டில் சில படங்களை இயக்கிவிட்டு நேரடியாக பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை இயக்கினார். ஷாருக்கான் மட்டுமின்றி பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து; அட்லீயின் மார்க்கெட்டை பாலிவுட்டிலும் எக்குத்தப்பாக உயர்த்தி வைத்தது.

அல்லு அர்ஜுனுடன் படம்: ஜவானை தொடர்ந்து இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற படத்தை இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானரில் இந்தப் படம் உருவாகலாம் என்று தெரிகிறது. இதில் தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். படத்தின் சில பணிகளில் ஹாலிவுட் கலைஞர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பள விவரம் இதுவா?: இந்நிலையில் இப்படத்துக்காக அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அல்லு அர்ஜுன் 175 கோடி ரூபாய், அட்லீக்கு 25 கோடி ரூபாய், ராஷ்மிகா மந்தனாவுக்கு 8 கோடி ரூபாய் மிருணாளுக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X