ஷங்கரை மதிக்காத அல்லு அர்ஜுன்?.. அட்லிக்கு கிடைத்த மரியாதை.. கடுப்பான ரசிகர்கள்!

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்க அல்லு அர்ஜுனின் புதிய மல்டி பிளக்ஸ் திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. அதில், இந்திய சினிமா இயக்குநர்களை கவுரவிக்கும் விதமாக வால் ஆஃப் ஃபேம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய சினிமாவின் பல பிரபல இயக்குநர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இயக்குநர் ஷங்கரின் புகைப்படம் இல்லாதது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய சினிமாவையே உருவாக்கிய பிரபல இயக்குநர்களை எல்லாம் விட்டு விட்டு லேட்டஸ்ட்டாக டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குநர்களை மட்டுமே அல்லு அர்ஜுன் வைத்துள்ளார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

Allu Arjun avoids Shankar and gives place to Atlee at the Wall of Great Directors in his Theater
Photo Credit:

குறிப்பாக இயக்குநர் ஷங்கரை விட்டு விட்டு அவரது சிஷ்யனான அட்லியின் புகைப்படத்தை வைத்திருப்பதை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

தியேட்டரை திறந்து வைத்த தெலங்கானா முதல்வர்: அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியருக்கு வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், அவரது மகனும் மூளைச்சாவு அடைந்தார். அந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்து ஒரு நாள் சிறையில் அடைத்தனர். அதற்கு ரேவந்த் ரெட்டி தான் காரணம் என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், தனது தம்பியின் திருமணத்துக்கு ரேவந்த் ரெட்டியை அல்லு அர்ஜுன் அழைத்திருந்தார். அதே போல புதிதாக திறக்கப்பட்ட தனது அல்லு அர்ஜுன் அல்லு சினிமாஸ் திறப்பு விழாவுக்கும் ரேவந்த் ரெட்டியை அழைத்திருந்தார்.

Allu Arjun avoids Shankar and gives place to Atlee at the Wall of Great Directors in his Theater
Photo Credit:

இயக்குநர்களுக்கு மரியாதை: இந்திய இயக்குநர்களை கவுரவப்படுத்தும் விதமாக வால் ஆஃப் கிரேட் டைரக்டர்ஸ் என்கிற ஒரு விஷயத்தை அல்லு அர்ஜுன் தனது தியேட்டரில் உருவாக்கியுள்ளார். அதில், இந்தியாவின் பிரபல இயக்குநர்களான மணிரத்னம், வெற்றிமாறன், ராஜமெளலி, அட்லி, ராஜ்குமார் ஹிரானி, ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல், சுகுமார், சஞ்சய் லீலா பன்சாலி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட இயக்குநர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஷங்கர் எங்கே காணோம்: இந்திய சினிமாவை உலக அரங்குக்கு ராஜமெளலிக்கு முன்பாகவே கொண்டு சென்றது இயக்குநர் ஷங்கர் தான் அவர் எங்கே பாஸ் காணோம் என ரசிகர்கள் அல்லு அர்ஜுனை விளாசி வருகின்றனர். மேலும், பிரபல இயக்குநர்களான ராம் கோபால் வர்மா, சிங்கீதம் ஸ்ரீனிவாஸ், கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் எல்லாம் எங்கே காணோம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றவர்கள் இல்லை என்றார்ல் கூட இயக்குநர் ஷங்கருக்கு உரிய மரியாதையை அல்லு அர்ஜுன் வழங்கியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அல்லு அர்ஜுன் தனக்கு ஃபேவரைட்டான இயக்குநர்களின் லிஸ்ட்டை கூட போட்டிருக்கலாமே என அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X