Allu Arjun Birthday: அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்.. பர்த்டே ட்ரீட் ரெடி.. இசையமைப்பாளர் யாரு?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஜன நாயகன் படம் தான் கடைசி படம் என விஜய் அறிவித்துவிட்டார். அட்லீ அடுத்து சல்மான் கானையும் கமல்ஹாசனையும் வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.

ஆனால், கடைசியாக அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஷாருக்கான் போல சல்மான் கான் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஷாருக்கானைத் தொடர்ந்து சல்மான் கான் பக்கம் போகாமல் அட்லீ எஸ்கேப் ஆகிவிட்டார் என்கின்றனர்.

Sai Abhayankar will compose music for Atlee next movie buzz trending

புஷ்பா 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் படத்தை அட்லீ இயக்கப்போகும் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிடப்போகிறது. மேலும், இளம் இசையமைப்பாளர் இந்த படத்தில் இணையப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அல்லு அர்ஜுன் பிறந்தநாள்: ஏப்ரல் 8ம் தேதி, 1982ம் ஆண்டு பிறந்த அல்லு அர்ஜுன் தனது 43வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் இன்று மாலை முதலே அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய சினிமாவில் எந்தவொரு நடிகரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை புஷ்பா 2 படத்தின் மூலம் செய்துக் காட்டிய அல்லு அர்ஜுனின் அடுத்த பட அறிவிப்பு நாளை வெளியாகிறது.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக காத்திருக்கிறது. அல்லு அர்ஜுன் சம்பளம் 300 கோடி என்றும் அட்லீ சம்பளம் 100 கோடி என்றும் படத்தின் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக 500 முதல் 600 கோடி வரை இருக்கும் என்கின்றனர். ட்வின்ஸ் கதையில் அல்லு அர்ஜுனை அட்லீ இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

பிரியங்கா சோப்ரா: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் எஸ்எஸ்எம்பி 28 படத்தில் ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில், அடுத்து அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்திலும் அவரையே ஹீரோயினாக புக் செய்யப் போவதாக பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.

Sai Abhayankar will compose music for Atlee next movie buzz trending

இசையமைப்பாளர் யார்?: சூர்யாவின் 45வது படத்துக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர் தான் அட்லீ படத்துக்கு இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசை கூட, கட்சி சேர, சித்திர புத்திரி என வீடியோ ஆல்பம் பாடல்கள் மூலம் அசத்திய சாய் அபயங்கர் அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X