ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆட மறுத்த சமந்தா... சமாதானப்படுத்திய அல்லு அர்ஜுன்!

சென்னை : ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. பல திரைப்பிரபலங்களும், இந்த பாட்டுக்கு ஆடி சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பாடல் இத்தனை உச்சத்தை தொட சமந்தா தான் முக்கிய காரணம். ஆனால், நடிகை சமந்தா இந்த பாடலில் ஆட முதலில் மறுத்ததாகவும் பின்னர் அல்லு அர்ஜூன் பேசி சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா

புஷ்பா

அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் சமந்தா ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த புஷ்பா படத்தில் சாமி வா சாமி மற்றும் ஸ்ரீ வள்ளி பாடல் என அனைத்துப்பாடல்களும் வெற்றிபெற்றன. மேலும் நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவும் தாறுமாறான கவர்ச்சி காட்டி சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டு இருப்பார்.

ஊ சொல்றியா மாமா

ஊ சொல்றியா மாமா

ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தாவின் டான்ஸை பார்ப்பதற்காகவே பலரும் இந்த படத்தை பார்த்தார்கள். இந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் ஆண்களை இழிவு படுத்துவதாக இருப்பதாக கூறி புகார்கள் எழுந்தன.

வெளியே போடும் வேஷம்ங்க

வெளியே போடும் வேஷம்ங்க

குறிப்பாக அந்த பாடலில், பெரிய பெரிய மனுஷன்னின்னு ஒரு சிலர் இங்கே வருவாங்க... ஒழுக்கமுன்னா நானேதான்னு ஒளறி சிலரு திரிவாங்க... ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன் வெளியே போடும் வேஷம்ங்க... வெளக்க அணைச்சா போதும் எல்லாம்... வெளக்குமாறும் ஒன்னுதாங்க என்ற வரிக்கு கண்டனங்கள் எழுந்தாலும் அந்த பாடலுக்கு தற்போது ஆண்கள் பெண்கள் என எந்தவித வேறுபாடு இல்லாமல் ஆட்டம் போட்டு வருகின்றனர்.

சமாதானப்படுத்திய அல்லு அர்ஜூன்

சமாதானப்படுத்திய அல்லு அர்ஜூன்

படத்தில் 3 நிமிடம் மட்டுமே வாரும் இந்த பாடலுக்காக சமந்தாவை அனுகிய போது, ஐட்டம் பாடல் என்பதால் இந்த பாடலில் ஆட, சமந்தா முதலில் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். பின்னர், அல்லு அர்ஜூன் சமந்தாவை சந்தித்து சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம்.

Recommended Video

பாவாடை தாவணியில்… இடுப்பை வளைத்து நெளித்து… சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடிய யாஷிகா ஆனந்த்!
ரூ5 கோடி சம்பளம்

ரூ5 கோடி சம்பளம்

இப்பாடலில் கவர்ச்சி நடனம் ஆட நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. முழு நீள படத்திற்கு வாங்கும் சம்பளத்தை சமந்தா ஒரு பாடலுக்கு வாங்கி உள்ளார். மேலும் புஷ்பா பாகம் இரண்டிலும் ஸ்பெஷல் பாடலுக்கு சமந்தா ஆடவைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X