நான்காவது தலைமுறையும் நடிக்க வந்தாச்சு.. சமந்தாவின் சகுந்தலம் படத்தில் இணைந்த அல்லு அர்ஜுனின் மகள்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அரா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சகுந்தலம் திரைப்படத்தில் தான் அவர் இணைந்துள்ளார்.
டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வைரலாக #AlluArha என்ற ஹாஷ்டேக்கை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சமந்தா படத்தில்
காளிதாசர் எழுதிய சகுந்தலா நூலை மையமாக கொண்டு உருவாகி வரும் சமந்தாவின் சகுந்தலா படத்தில் தான் அல்லு அர்ஜுனின் செல்ல மகளான அரா இணைந்துள்ளார். நீலிமா குணா மற்றும் தில் ராஜு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் குணசேகர் இயக்குகிறார். நடிகை அதிதி பாலனும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் மகள்
டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகரான அல்லு அர்ஜுனின் செல்ல மகளான அல்லு அரா குழந்தை நட்சத்திரமாக டோலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

நான்காவது தலைமுறை
பத்மஸ்ரீ அல்லு ராமலிங்கய்யா காருவின் கொள்ளுப் பேத்தியும், அல்லு அரவிந்த் காருவின் செல்ல பேத்தியும், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சினேகாவின் அன்பு மகளான அல்லு அரா சமந்தாவின் சகுந்தலம் படத்தில் அறிமுகமாக உள்ளார் என்றே அறிவித்துள்ளனர். அல்லு ராமலிங்கய்யா காலத்தில் இருந்தே இந்த குடும்பம் சினிமா குடும்பம் தான்.

குவியுது வாழ்த்து
நடிகர் அல்லு அர்ஜுனின் செல்ல மகளான அல்லு அரா சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ள சந்தோஷமான செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் குழந்தை அராவை வாழ்த்தி வருகின்றனர். சமந்தாவுடன் நான் சினிமாவில் பயணித்துள்ளேன். இப்போ என் மகள் பயணிக்க போகிறாள் என்றும் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

புஷ்பா அப்டேட்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியான அவரது அலா வைகுந்தபுரமுலோ திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் தனது மகள் அறிமுகம் குறித்த ட்வீட்டுக்கு கீழே பலரும் புஷ்பா அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











