Allu Arjun: அல்லு அர்ஜுனை பார்க்க 42 ரூல்ஸ்?.. பிரபலம் பகீர்.. ஆதாரமற்றவை என நடிகர் தரப்பு மறுப்பு!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டுமென்றால் 42 கடுமையான ரூல்ஸை பின்பற்ற வேண்டும் என பேட்டி ஒன்றில் காவேரி என்பவர் பேசியது "ஆதாரமற்றவை" என அல்லு அர்ஜுன் டீம் மறுத்துள்ளது. மேலும், குற்றச்சாட்டு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தியது.
பிராண்ட் மேலாளர் காவேரி பருவா "ஸ்வீகிருதி டாக்ஸ்" பாட்காஸ்டில் அல்லு அர்ஜுனை சந்திக்கப் போகும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்ததை அடுத்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இந்தியளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், அவரது இமேஜை டேமேஜ் செய்ய சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாக அல்லு அர்ஜுன் ரசிகர்களும் காவேரியை கண்டபடி திட்டி வருகின்றனர்.
அல்லு அர்ஜுனை பார்க்க 42 ரூல்ஸ்? ராயல் என்ஃபீல்டின் பிராண்ட் மேலாளராக பணிபுரிந்த காவேரி பாட்காஸ்டில், "அவரைச் சந்திக்கும் முன் 42 ரூல்ஸ் குறிப்பு இருந்தது. 'கண்களைப் பார்க்காதீர்கள், கைகுலுக்காதீர்கள்' உட்பட பல கட்டுப்பாடுகள். மேலும், மேனேஜர் மேல மேனேஜர் என ஏகப்பட்ட பேர் ஒரே அலம்பல் செய்தனர்" என்று விவரித்தார். இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தைத் தூண்டியது.
கிளம்பிய சர்ச்சை: அல்லு அர்ஜுன் பற்றி காவேரி பேட்டிக் கொடுத்தது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவருக்கு அல்லு அர்ஜுன் டீமிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும் பகீர் கிளம்பின. பேட்டி எடுத்தவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த பேட்டியை நீக்கிய பின்னரும், அல்லு அர்ஜுன் டீம் அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
எல்லாமே பொய்: சர்ச்சை பெரிதான நிலையில், அல்லு அர்ஜுனின் டீம் உடனடியாகப் பதிலளித்தது. செவ்வாய்க்கிழமையான் இன்று வெளியான அறிக்கையில், "நடிகர் அல்லு அர்ஜுன் பற்றிய கருத்துக்கள் ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. அவர் மிகுந்த கண்ணியத்துடன் நடப்பவர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொறுப்பானவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை தொடங்கியுள்ளோம்" என்று அறிக்கை ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளனர்.
எச்சரிக்கை: அனைவரையும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அல்லு அர்ஜுன் டீம் சமூக வலைத்தளங்களிலும் இதை வலியுறுத்தி, சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதை நிறுத்தவும், சட்ட நடவடிக்கை நடப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











