சட்டை கிழிஞ்சு.. உடம்பெல்லாம் ரத்தம்.. அடிதடியில் இறங்கிய அந்த 2 ஹீரோக்களின் ரசிகர்கள்.. ஷாக்!

ஹைதராபாத்: நம்ம ஊரில் தல - தளபதி ரசிகர்களை விட யாரும் சோஷியல் மீடியாவில் பயங்கர சண்டை போட்டு பார்த்திருக்க முடியாது. ஆனால், தெலுங்கு ரசிகர்கள் அதையும் தாண்டி பொது வெளியிலேயே சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் பிரபாஸ் ரசிகர் ஒருவரை அல்லு அர்ஜுன் சேர்ந்து கொண்டு அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

Allu Arjun fans brutally attacked Prabhas fan video shocks everyone

ரசிகர்கள் சண்டையை மூட்டிவிட்டு எப்படி நடிகர்கள் குளிர் காய்கின்றனர் பாருங்கள் என்றும் சினிமா பிரபலங்களுக்காக ஏன் டா நீங்க அடிச்சிட்டு சாகறீங்க என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ரசிகர்களின் அட்ராசிட்டி: ஒரு நாயகன் உதயமாக வேண்டும் என்றால் ரசிகர் மன்றம் அவசியம். புதிய படங்கள் வெளியானால் கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் செய்வது, கரன்ட் கம்பத்தில் ஷாக் அடித்து இறப்பது, லாரியில் நடனமாடிக் கொண்டே சாலையில் விழுந்து மரணிப்பது, சோஷியல் மீடியாவில் தனக்கு பிடிக்காத நடிகரின் குடும்பத்தையே ஆபாசமாக சித்தரித்து ட்ரோல் செய்வது என அனைத்தையும் செய்வது ரசிக மன்றத்தில் இருக்கும் ரசிகர்கள் தான் என்கின்றனர்.

விஜய், ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை: தமிழ்நாட்டில் அதிகளவில் சண்டை போட்டுக் கொள்வது என்றால் விஜய், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை தான். ஆனால், அவர்களும் மோசமாக அடிதடி சண்டையில் எல்லாம் இறங்க மாட்டார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் அவர்கள் போடும் சண்டைகளே மிகவும் தரக்குறைவாக இருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர். விஜய், அஜித் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் அவ்வப்போது ரசிகர்கள் சண்டை வேண்டாம் என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Allu Arjun fans brutally attacked Prabhas fan video shocks everyone

ரசிகருக்கு அடி, உதை: தமிழ்நாட்டு நிலவரம் இப்படி இருந்தால் ஆந்திரா நிலவரம் அதை விட மோசமாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் போது தமாஸாக பேச ஆரம்பித்து வாய்த்தகராறாக மாறிய நிலையில், பிரபாஸ் ரசிகர்களுக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் அடிதடை சண்டை வெடித்துள்ளது.

பஞ்சரான பிரபாஸ் ரசிகர்: சட்டையை எல்லாம் கிழித்து ரத்தம் சொட்ட சொட்ட பிரபாஸ் ரசிகர் ஒருவரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கும்பலாக சேர்ந்துக் கொண்டு அடித்து நொறுக்கும் காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன. ஜெய் அல்லு அர்ஜுன் என சொல்லு என சொல்லி சொல்லி அடிப்பதை பார்த்தால் இளைஞர்களின் எதிர்காலம் எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்கிற கேள்வியை உருவாக்குகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக லோக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்திசொல்வாரா புஷ்பா: பிரபாஸ் நடிப்பில் அடுத்து கல்கி திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அதே போல அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 இந்த ஆண்டு வெளியாகிறது. இந்நிலையில், பிரபாஸ் ரசிகரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மனசாட்சியே இல்லாமல் இப்படி அடித்து துன்புறுத்தியதை பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கு புத்தி சொல்வாரா? என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

நடிகர்களுக்குத்தான் அசிங்கம்: நடிகர்களின் பெயரை சொல்லிக் கொண்டு ரசிகர்கள் சண்டை போடுவது அந்த நடிகர்களுக்குத்தான் கெட்ட பெயரை உண்டாக்கும். அவர்கள் எல்லாம் பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒன்றாக பார்ட்டி பண்ணி ஜாலியாகத்தான் இருக்கின்றனர் என்பது தனிக்கதை.

More from Filmibeat

https://tamil.oneindia.com/photos/oscar-2024-wwe-john-cena-announced-oscar-award-without-dress-oscars-2024-oi114691.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X