Don't Miss!
- News
ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!
- Automobiles
தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்கிறது கவாஸாகி... எப்போனு தெரியுமா?
- Finance
ஏறிய வேகத்தில் இறங்க போகிறது சமையல் எண்ணெய் விலை: மத்திய அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என் பையனோட படத்தை ரிலீஸ் பண்ணாதீங்க... அடம்பிடிக்கும் அல்லு அர்ஜூன் தந்தை
மும்பை : நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் கடந்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
இந்தப் படத்திற்கு அனைத்து மொழிகளிலும் கிடைத்த வரவேற்பையடுத்து தற்போது அவரது முந்தைய வெற்றிப்படமான அலா வைகுந்தபுரமுலு படம் வரும் 26ம் தேதி இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அல்லு அர்ஜூனின் தந்தை தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுக்கு கன்டிஷன் போட்டு தான் நடித்தேன்...ஓப்பனாக பேட்டியளித்த ஜெய்பீம் நடிகர்

புஷ்பா படம்
அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் கடந்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது.

300 கோடி ரூபாய் வசூல்
தற்போது ஒரு மாதத்தை கடந்து இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிவருகிறது. 300 கோடி ரூபாய் வசூலை தாண்டி இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தியில் இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து அல்லு அர்ஜூனின் முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலு படத்தை தற்போது இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அலா வைகுந்தபுரமுலு ரிலீஸ்
வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று இந்தப் படம் இந்தியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாக அலா வைகுந்தபுரமுலு படம் பாலிவுட்டில் ஷெசாதா என்ற பெயரில் பாலிவுட் நாயகன் கார்த்திக் ஆர்யன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார்.

அலா வைகுந்தபுரமுலு ரீமேக்
பூஷன் குமார் மற்றும் அமான் கில் என்பவர்களுடன் இணைந்து அவர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அலா வைகுந்தபுரமுலு படத்தின் டப்பிங் பட ரிலீஸ் இந்தப் படத்தின் ரிலீசை பாதிக்கும் என்று கருதி அவர் இந்த டப்பிங் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகனின் படத்தை தடுக்கும் தந்தை
இதுகுறித்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் நடைபெறவுள்ளநிலையில், இதுகுறித்த இறுதி முடிவை படத்தின் தயாரிப்பாளர் இன்றைய தினம் எடுப்பார் என்று தெரிகிறது. இவ்வாறு தன்னுடைய மகனின் படத்தின் ரிலீசை தந்தையே தடுக்கும் நிலை காணப்படுகிறது.

26ம் தேதி ரிலீசாகுமா?
இதனிடையே, இந்த விவகாரத்தில் அனைவருக்கும் சிறப்பான வகையில் முடிவு எடுக்கப்படும் என்று அலா வைகுந்தபுரமுலு படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் வரும் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாகுமா என்பது குறித்து இன்றைய தினம் தெரியவரும்.

ரிலீஸ் செய்யாமலிருக்க ரூ 8 கோடி?
இந்நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்க ஷெசாதா படக்குழுவினர், அலா வைகுந்தபுரமுலு தயாரிப்புத் தரப்பிற்கு 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துள்ளது.