அல்லு அர்ஜுனுக்கு கொரோனா...ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்

ஐதராபாத் : தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அல்லு அர்ஜுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தான் நலமுடன் இருப்பதாகவும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்!

இது பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாசிடிவ் என சோதனையில் உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Allu Arjun is covid positive, asks fans not to worry about him

நான் நலமுடன் இருப்பதால் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகள், வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவருக்கு, சில நாட்களுக்கு முன்பு தான் நெகடிவ் என சோதனையில் தெரிய வந்தது. முன்னதாக சிரஞ்சீவியின் மருமகன் கல்யாண் தேவ்விற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X