மாஸ் அப்டேட்.. புஷ்பாவுக்கு அடுத்து.. அல்லு அர்ஜுனின் 21வது படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

ஹைதராபாத்: டோலிவுட்டின் ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள 21வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Mahesh Babu Vs Allu Arjun | Pushpa, Sarkaru Vaari Paata | Tollywood Breaking

இந்த ஆண்டு ஜனவரியில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் மெகா ஹிட்டானது.

இந்நிலையில், புஷ்பா படத்திற்கு பிறகு இயக்குநர் கொரதல சிவாவுடன் இணைந்து அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார்.

மெகா பிளாக்பஸ்டர்

மெகா பிளாக்பஸ்டர்

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டாரான அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி திரிவிக்ரம் இயக்கத்தில் உருவான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் சுமார் 100 கோடியில் எடுக்கப்பட்டு 262 கோடி வசூலை வாரிக் கொடுத்தது.

20வது படம்

20வது படம்

அடுத்ததாக இயக்குநர் சுகுமாருடன் இணைந்து புஷ்பா எனும் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுனின் இந்த 20வது படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெகபதி பாபு நடித்து வருகின்றனர். செம்மரக் கட்டை கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

பரத் அனி நேனு இயக்குநர்

பரத் அனி நேனு இயக்குநர்

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் 21வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போஸ்டருடன் வெளியாகி இருக்கிறது. AA21 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை மகேஷ் பாபுவின் மெகாஹிட் படமான பரத் அனி நேனு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு பட இயக்குநர் கொரதல சிவா இயக்குகிறார்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், #AlluArjun #Pushpa உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை போட்டு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். திரை பிரபலங்கள் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X