விஜயை இயக்கிய இயக்குநர்களை டார்கெட் செய்யும் அல்லு அர்ஜுன்.. அட்லீக்கு அடுத்து யார் தெரியுமா?

ஹைதராபாத்: என்னதான் பச்சன்களும் கான்களும் நிறைந்த பாலிவுட் உலக அரங்கில் இந்திய சினிமாவாக ஒரு காலகட்டம் வரை பார்க்கப்பட்டு வந்தாலும் அதன் பின்னர், இந்திய சினிமாக்கள் என்னால் அது மட்டும் இல்லை என்று புரட்டிப் போட்டது தென்னிந்திய சினிமா. குறிப்பாக பான் இந்திய அளவில் ஹிட் ஆன படங்கள் பாலிவுட்டை விட தென்னிந்தியாவில் தான் அதிகம். பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவை ரீச் செய்திருக்கலாம், ஆனால் தென்னிந்திய படங்கள் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ்களை டீல் செய்துள்ளது என்பது சமகால நடைமுறையாக உள்ளது.

இதில் தெலுங்கு சினிமாவுக்கு பெரும் பங்கு உள்ளது. பாகுபலி, பாகுபலி 2, அர்.ஆர்.ஆர். புஷ்பா, புஷ்பா 2, கல்கி கி.பி 2898 என தெலுங்கு சினிமா இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸில் ஏற்படுத்திய தாக்கத்தை மறுக்க முடியாது. அதேபோல் கன்னட சினிமாவில், கே.ஜி.எஃப். கே.ஜி.எஃப் 2, காந்தாரா சாப்டர் 1 என்ற படங்களைக் குறிப்பிடலாம்.

இப்படி இருக்கும்போது, இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறி நிற்கும் நடிகராக அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2 படத்தின் பிரமாண்டமான வெற்றிக்குப் பின்னர், அடுத்தடுத்து விஜயை வைத்து மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்து, அதில் தீர்க்கமாகவும் செயல்பட்டு வருகிறார்.

Allu Arjun Joins With Lokesh Kanagaraj After Atlee Movie Kollywood Makes Noise

அல்லு அர்ஜுன்: அதாவது புஷ்பா 2 படத்தின் வெற்றிக்குப் பின்னர், இயக்குநர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூபாய் 175 கோடிகள் சம்பளம் என்று கூறப்படுகிறது. அதேபோல் அட்லீக்கு மட்டும் ரூபாய் 100 கோடிகள் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படம் பெரிய அளவில் கிளிக் ஆனால், சர்வதேச அளவில் படத்தை எடுத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Allu Arjun Joins With Lokesh Kanagaraj After Atlee Movie Kollywood Makes Noise

லோகேஷ் கனகராஜ்: இப்படி இருக்கும்போது, நடிகர் அல்லு அர்ஜுன் அட்லீ படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளாராம். இதற்காக லோகேஷ் கனகராஜ்க்கு அல்லு அர்ஜுனே நேரடியாக போன் செய்து இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று தெரிவித்துள்ளாராம். அல்லு அர்ஜுனே இவ்வாறு கேட்டுள்ளதால், லோகேஷ் கனகராஜ் தற்போது செம குஷியாக கதையை தயார் செய்து கொண்டு இருக்கிறாராம். இந்த தகவலைக் கேட்ட கோலிவுட் வட்டாரம், அல்லு அர்ஜுன் தமிழ் சினிமாவில் இருந்து செலக்ட் செய்யும் இயக்குநர்கள் எல்லாம் விஜயை வைத்து மாஸ் ஹிட் படங்கள் கொடுத்தவர்களாக உள்ளார்களே என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X