Allu Arjun: ஆதிபுருஷ் படத்தில் அல்லு அர்ஜுனா? கரண்ட் கட்டானதுனால கிராபிக்ஸ் இப்படி வந்துடுச்சா?

சென்னை: ஆதிபுருஷ் படத்தில் அல்லு அர்ஜுன் வெயிட்டான கேமியோ செய்துள்ளார் என ரசிகர்கள் ஒரு போட்டோவை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் படம் இன்று வெளியாகி தியேட்டர்களை கொண்டாட்ட களமாக மாற்றி உள்ளது. இந்நிலையில், அந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் முகச்சாயலில் ஆதிபுருஷ் படத்தில் இருந்து ஒரு ஸ்க்ரீன் ஷாட் வெளியானது தான்.

Allu Arjun lookalike Adipurush still getting trolled in social media

அல்லு அர்ஜுன் தியேட்டரில் ஆதிபுருஷ்: நடிகர் அல்லு அர்ஜுன் புதிதாக கட்டியுள்ள AAA தியேட்டரில் பிரபாஸின் ஆதிபுருஷ் படம் பிரம்மாண்டமாக இன்று வெளியானது. ஹைதரபாத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த தியேட்டர் திறக்கப்பட்ட நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை அந்த தியேட்டரில் கண்டு ரசித்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் தியேட்டரில் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில், அல்லு அர்ஜுனே ஆதிபுருஷ் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என சோஷியல் மீடியாவே ஃபயர் ஆகி வருகிறது.

ஆதிபுருஷ் படத்தில் அல்லு அர்ஜுனா: ஆதிபுருஷ் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார் என ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதை பார்த்த நெட்டிசன்கள் கரண்ட் கட்டானதால சிஜிக்கு பதில் அல்லு அர்ஜுன் போட்டோவை வச்சு எடிட் பண்ணிட்டாங்க போல என கலாய்த்து வருகின்றனர்.

குவியும் ட்ரோல்கள்: வானர கெட்டப்பில் அல்லு அர்ஜுன் இருப்பது போன்ற ஆதிபுருஷ் படத்தின் ஸ்க்ரீன் ஷாட் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுன் ரசிகர்களை பிரபாஸ் ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து ஓட்டி வருகின்றனர்.

Allu Arjun lookalike Adipurush still getting trolled in social media

பதிலுக்கு இவரு தான் ராமரா என ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் இருக்கும் சில காமெடியான காட்சிகளையும் ஷேர் செய்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். எதிர்பார்த்த அளவுக்கு சிஜி தரமாக இல்லாமல் ரொம்பவே சுமாராக வந்ததால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

Allu Arjun lookalike Adipurush still getting trolled in social media

ஜீசஸ் வேணுமா இருக்கு:

ஜீசஸ் வேணுமா ஜீசஸ் இருக்கு.. Allu arjun வேணுமா அதுவும் இருக்கு.. விக்ரம்பிரபு வேணுமா அது இருக்கு.. என தில் ராஜு போட்டோவை போட்டே ஆதிபுருஷ் படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Allu Arjun lookalike Adipurush still getting trolled in social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X