விஜய் தேவரகொண்டாவின் அன்புப்பரிசு…அல்லு அர்ஜுனாவின் ரவுடி கெட்டப்.. வைரல் புகைப்படம்!

ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவில் தனது ஸ்டைலிஷான ஆக்ஷன் மற்றும் நடனத்தின் மூலம் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் இப்பொழுது விஜய்தேவரகொண்டா போட்ட மாதிரியே காஸ்டியூமில் அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அலா வைகுண்டபுரமுளோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது "புஷ்பா" என்ற வித்தியாசமான கதையில நடித்து வர வில்லன் கதாபாத்திரத்திற்கு பிரபல தமிழ் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க உள்ளதாக தெரிகிறது.

விஜய் தேவரகொண்டவை போலவே காஸ்டியூமில் அசத்தல் லுக்கில் நீண்ட தலை முடியுடன் இருக்கும் இந்தப் படத்தை பதிவிட்ட அல்லு அர்ஜுனுக்கு எக்கசக்கமான லைக்குகள் ஒருபுறம் கூடிவர இப்பொழுது இந்த ரவுடி ட்ரெஸ் வைரலாகி வருகிறது.

பூரி ஜெகனாத் இயக்கத்தில்

பூரி ஜெகனாத் இயக்கத்தில்

தெலுங்கு சினிமாவை சமீபகாலமாக ஆட்டிப்படைத்து வரும் இளம் நாயகர்களில் மிக முக்கியமான நடிகர் விஜய் தேவரகொண்டா தொடர் வெற்றிகளுக்கு பிறகு இப்பொழுது மாஸ் இயக்குனர் பூரி ஜெகனாத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நண்பர்களாக

நண்பர்களாக

டோலிவுட்டை பொருத்தவரையிலும் சக நடிகர்கள் எந்த பேதமும் இன்றி நண்பர்களாக பழகி வரும் நிலையில் அல்லு அர்ஜுனுக்கு விஜய் தேவரகொண்டா ரவுடி ட்ரெஸ் ஒன்றை பரிசளித்து உள்ளார்.

வில்லனாக விஜய் சேதுபதி

வில்லனாக விஜய் சேதுபதி

அலா வைகுண்டபுரம்லோ திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் உலக அளவில் வசூல் சாதனையை படைத்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது இந்த ரங்கஸ்தளம் இயக்குனருடன் இணைந்து "புஷ்பா" திரைப்படத்தில் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

ரவுடி ட்ரெஸ்

ரவுடி ட்ரெஸ்

விஜய் தேவரகொண்டா அன்புப் பரிசாக அளித்த அந்த கருப்பு நிற ரவுடி ட்ரெஸ் உடுத்திக்கொண்ட அல்லு அர்ஜுன் நீண்ட முடியுடன் இப்பொழுது இருக்கும் லுக்கில் பிளாக் கூலருடன் செம்ம மாஸாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பரிசளித்தற்கு விஜய் தேவரகொண்டாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாங்க ஆர்வம்

ரசிகர்கள் வாங்க ஆர்வம்

ஏற்கனவே இந்த பிளாக் ரவுடி ட்ரெஸ்ஸில் விஜய் தேவரகொண்டா இருக்கும் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது அதே போன்ற உடையில் அல்லு அர்ஜுன் பதிவிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களிடம் இந்த ரவுடி ட்ரெஸ் மாடல் பெரும் வரவேற்பை பெற்று வர அனைவரும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X