அப்படியெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது.. அனிருத்துக்கு ஆர்டர் போட்ட அல்லு அர்ஜுன்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள் வரிசையாக நடிகர் ஷாருக்கானுக்கு படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் ரிலீஸுக்கு முன்பே மகேஷ் பாபு ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தினார். படத்தைப் பார்த்துவிட்டு வேற லெவல் வெறித்தனம் என ட்வீட் போட்டு ஷாருக்கானை சந்தோஷப்படுத்தி இருந்தார்.

Allu Arjun ordered Anirudh to give a powerful songs to him

அல்லு அர்ஜுன் பாராட்டு: இந்நிலையில் மகேஷ்பாபுவை தொடர்ந்து புஷ்பா படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனும் ஜவான் படத்திற்கு மிகப் பெரிய பாராட்டு பத்திரத்தை பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் நடிப்பு, விஜய் சேதுபதியின் வெறித்தனம், தீபிகா படுகோனின் பிரசன்ஸ், தேசிய அளவு நடிகையாக மாறிவிட்ட நயன்தாராவின் திறமை மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தின் பிஜிஎம் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறிப்பிட்டு அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார்.

அல்லு அர்ஜுன் பாராட்டை பார்த்த ராக்ஸ்டார் அனிருத், "ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ" என நன்றி தெரிவிக்க, வெறும் தேங்க்ஸ் மட்டும் சொன்னால் போதாது என் படத்துக்கும் நல்ல பாடல்களை கொடுத்தே தீர வேண்டும் என்கிற கட்டளையை தற்போது போட்டுள்ளார்.

சிக்கிய அனிருத்: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் தான் நடிக்கப் போகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்றும் அதற்காகத்தான் அல்லு அர்ஜுன் தற்போது ஜவான் படத்தை பாராட்டி உள்ளார் என்றும் அந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்பதும் உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் படம் இல்லையா: லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய் அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல்கள் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பாலிவுட்டில் ஷாருக்கான் படத்திற்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலமான அனிருத் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் தேவரா படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்து அல்லு அர்ஜுன் படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X