Allu Arjun: அல்லு அர்ஜுனின் சக்திமான் அவதாரம் என்னாச்சு.. பாசில் ஜோசப் கப்சிப்னு இருக்க காரணம் என்ன?
ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவில் வசூல் மன்னனாக மாறி நிற்கிறார் அல்லு அர்ஜுன். அவரது கால் ஷீட்க்குக்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்துக் கொண்டு உள்ளன. ஏற்கனவே புஷ்பா 3 படத்திற்கு லீட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் புதிய படம் தொடர்பாக ஒரு தகவல் திரையுலகில் உலா வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் தெலுங்கு சினிமா உலகில் இருந்து வந்த அல்லு அர்ஜுன் ஒரு ஸ்டார் என்றால், மலையாள சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கும் பாசில் ஜோசப் ஒரு ஸ்டார். இவர் இயக்கத்தில் எந்த அளவுக்கு கலக்குகிறாரோ அதே அளவுக்கு நடிப்பிலும் அசத்துகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான மின்னல் முரளி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது மட்டுமல்லாமல் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பொன்மன் படமும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.
சில மாதங்களுக்கு முன்னர் 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடரான சக்திமான் தொடரை படமாக இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதாவது மின்னல் முரளி படமானது மலையாள சினிமாவின் இன்னும் சொல்லப்போனால் இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம் என்று கூறலாம். ஆனால் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் சக்திமான் நிகழ்ச்சியான ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் தான். இப்படி இருக்கும்போது, மின்னல் முரளி படத்தை அட்டகாசமாக இயக்கிய பாசில் ஜோசப் சக்தி மான் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் மொத்த 90'ஸ் கிட்ஸ்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அட்லீயின் சூப்பர் ஹீரோ: இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று உலா வரத் தொடங்கியுள்ளது. அதாவது, இவர்கள் இருவரும் இணைவது உறுதி என்றும், ஆனால் அது சக்தி மான் படம் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இணையும் படம் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ படம் முடிந்த பின்னர் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. சக்தி மான் படம் அல்லு அர்ஜுன் லிஸ்டில் இருந்து நீக்கப்பட மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
காரணம்: அதாவது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தற்போது கமிட் ஆகி உள்ள படமும் சூப்பர் ஹீரோ படம் என்பதால், எதிர்காலத்தில் இந்த படத்தின் பீரிகுவல், சீக்குவல் என இதில் நடிக்கவே சரியாக இருக்கும் எனவும், சூப்பர் ஹீரோ என வரும்போது அட்லீ படத்தில் அல்லு அர்ஜுன் வெளிப்படுத்தும் நடிப்புதான் முதல் கிராஃப்ட். அதுவே சக்திமான் படத்தில் நடித்தால் அது ஒப்பீட்டுக்கு ஆளாகும் எனவே, அதை தவிர்க்கவே சக்திமான் படத்தை வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











