பாடல்கள் செம ஹிட்..சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டீங்க! இசை அமைப்பாளரை பாராட்டித் தள்ளும் பிரபல ஹீரோ!

By

சென்னை: சொன்ன வார்த்தையை காப்பாற்றிவீட்டீர்கள் என்று இசை அமைப்பாளர் தமனை பாராட்டி இருக்கிறார், பிரபல ஹீரோ.

Recommended Video

Pushpa First Look | Stylish Star Allu Arjun 37th Birthday

தமிழில் ஈரம், காஞ்சனா, வந்தான் வென்றான், ஒஸ்தி, காதலில் சொதப்புவது எப்படி? தில்லுக்குத் துட்டு, சிவலிங்கா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் தமன்.

தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இவர் கடைசியாக அல்லு அர்ஜுனின், அல வைகுந்தபுரம்லோ படத்துக்கு இசை அமைத்திருந்தார்.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரகனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர். த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இதன் பாடல்களும் செம ஹிட். இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தெலுங்கு சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்ட்டில் இந்தப் படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

புட்ட பொம்மா

புட்ட பொம்மா

பல படங்களின் சாதனைகளை உடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தப் படம், பழைய கதையை கொண்டதுதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் இந்தப் படம் ஹிட்டாகியுள்ளது. திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், புட்ட பொம்மா என்ற பாடல் மெகா ஹிட்டானது.

சொன்னதை செஞ்சிட்டீங்க

இந்த பாடல், யூடியூப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் கொண்டாடினர். இந்நிலையில் இசை அமைப்பாளர் தமனை, 'சொன்னதை செஞ்சிட்டீங்க...' என்று பாராட்டியுள்ளார் ஹீரோ, அல்லு அர்ஜுன்.

காப்பாற்றி விட்டீர்கள்

காப்பாற்றி விட்டீர்கள்

இதுபற்றி ட்விட்டரில் அவர், உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். உங்கள் வாக்கை காப்பாற்றிவிட்டீர்கள். அலா வைகுந்தபுரம்லோ படத்தைத் தொடங்கும் முன், பாடல்கள் பில்லியனைத் தாண்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நீங்கள், 'டன் பிரதர், சத்தியம் பண்றேன்' என்றீர்கள். இப்போது 1.13 பில்லியனை தொட்டிருக்கிறது. நன்றி தமன். வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X