அடேங்கப்பா.. ராம்சரண் மகளுக்கு அல்லு அர்ஜுன் இப்படியொரு கிஃப்ட் கொடுத்துருக்காரா? இவ்ளோ காஸ்ட்லியா!

ஹைதராபாத்: ஸ்டைலிஷ் ஸ்டார் என டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்ம புஷ்பா அல்லு அர்ஜுன் தனது மருமகளான க்ளின் கிளாராவுக்கு சூப்பரான கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியிருப்பது தான் டாக் ஆஃப் தி ராமோஜி ராவ் சிட்டியாகவே இருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியை தாத்தாவாக்கி விட்டு ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தங்களுக்கு பல வருடங்கள் கழித்து பிறந்த பெண் குழந்தையை கொஞ்சி வரும் வேளையில் ஏகப்பட்ட பரிசுகள் புதிதாக பிறந்த அந்த பிஞ்சு குழந்தைக்கு குவிந்து வருகிறது.

Allu Arjun presented a golden slate to Ram Charan daughter Klin Kaara

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தங்கத் தொட்டிலை பரிசாக அளித்த நிலையில், தற்போது அல்லு அர்ஜுன் தங்க ஸ்லேட் ஒன்றை க்ளின் காராவிற்கு பரிசாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராம்சரணுக்கு பெண் குழந்தை: நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா இருவரும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டாலும், உடனடியாக குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் கருமுட்டையை உறைய வைத்து உரிய காலத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவை எடுத்தனர்.

Allu Arjun presented a golden slate to Ram Charan daughter Klin Kaara

இந்நிலையில், கடந்த ஆண்டு இருவரும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்த நிலையில், உபாசனா கர்ப்பமானார். கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ராம்சரண் பெண் குழந்தைக்கு அப்பாவானார்.

மாமா அல்லு அர்ஜுன் செம ஹேப்பி: டோலிவுட் திரையுலகமே ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் போலத்தான். ராம்சரணின் உறவினரான அல்லு அர்ஜுன் தனக்கு மருமகள் வந்து விட்டார் என குழந்தை பிறந்த செய்தி அறிந்ததுமே தனது மனைவி சினேகா ரெட்டியுடன் மருத்துவமனைக்கு சென்ற வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

Allu Arjun presented a golden slate to Ram Charan daughter Klin Kaara

தங்க ஸ்லேட் பரிசு: இந்நிலையில், அல்லு அர்ஜுன் பிரத்யேகமாக க்ளின் காரா பெயர் மற்றும் பிறந்த விவரங்கள் பொறிக்கப்பட்ட தங்கத்திலான ஸ்லேட் ஒன்றை ராம்சரணின் மகளுக்கு பரிசாக வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக அம்பானி ராம்சரண் மகளுக்கு ஒரு கோடி மதிப்பிலான தங்கத் தொட்டிலை பரிசாக வழங்கி இருந்தார். இந்நிலையில், பல லட்சம் மதிப்புள்ள தங்க ஸ்லேட்டை அல்லு அர்ஜுன் கிஃப்ட்டா கொடுத்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X