2000 கோடி பில்டப் எல்லாம் ஓவர்.. ரெய்டுகளுக்கு பின்னர் வெளியே வந்த உண்மை.. புஷ்பா 2 உண்மையான வசூல்

சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம், புஷ்பா 2. மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வெளியான இந்த படம், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்தப் படம் ரிலீஸ்க்கு முன்னர் இருந்து, ரிலீஸ், ரிலீஸ்க்குப் பின்னர் என பல பிரச்னைகளை சந்தித்தது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தான் புஷ்பா 2. புஷ்பா படத்தின் கிளைமேக்ஸில், புஷ்பா 2 குறித்த அறிவிப்பும் இருந்ததால் ரசிகர்கள் புஷ்பா 2 படத்திற்காக சுமார் மூன்று ஆண்டுகள் காத்திருந்தனர். புஷ்பா படத்திற்கு கிடைத்த வரவேற்பு, புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததால், படக்குழு புஷ்பா 2 படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியது. அதாவது இயக்குநர் மற்றும் நடிகர் என பலரும் வேறு படங்களில் கமிட் ஆகாமல், மூன்று ஆண்டுகளாக இந்த படத்தில் முழு கவனமும் செலுத்தினர்.

Allu Arjun Pushpa 2 Pushpa 2 Box Office 2 2

படம் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ்க்கு முன்னர் படத்தின் புரோமோஷன், இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றது. படத்திற்கு வெளிநாடுகளிலும் புரோமோசன் நடைபெற்றது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதாவது படம் 200 நிமிடங்கள் ஓடியது. அதாவது, 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடியது. அதன் பின்னர் மேலும் 17 நிமிடங்களுக்கு காட்சிகள் சேர்க்கப்பட்டு எக்ஸ்டெண்டெட் வெர்ஷன் திரையிடப்பட்டது.

பிரச்னை: படம் ரிலீஸ் ஆன நாளில், தியேட்டருக்கு முன் அறிவிப்பு இல்லாமல் அல்லு அர்ஜுன் வந்ததால், ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். இதனால், தெலுங்கானா அரசுக்கும் தெலுங்கு சினிமா உலகினருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், புஷ்பா படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என பலரது வீட்டிலும் அலுவலகத்திலும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். மைத்ரீ மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரை, விமான நிலையத்திலேயே பிடித்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இப்படியான பிரச்னைகளையும் சோதனைகளையும் புஷ்பா படக்குழுவினர் எதிர்கொண்டனர்.

மொத்த வசூல்: படத்திற்கு, இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வெளிநாட்டிலும், ஹிந்தியிலும் நல்ல வசூல் கிடைத்தது. படம் இந்தியில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. படம் ரூபாய் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், படம் உலகம் முழுவதும் ரூபாய் 1871 கோடிகள் தியேட்டரில் மட்டும் வசூல் செய்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்திற்கு ஓடிடி, ஆடியோ ரைட்ஸ் என அவற்றையும் கணக்குப் பார்த்தால் படத்தின் மொத்த வருமானம் ரூபாய் 2,400 கோடிகள் வரையில் பிசினஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X