Pushpa 2 HD Leaked: இணையத்தில் லீக்கான புஷ்பா 2 HD பிரிண்ட்.. பெரும் அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை: தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் அதில் கள்ளத்தனங்களும் சேர்ந்தே வளர்ந்து விடுகின்றது. இந்தக் கள்ளத்தனங்களால் பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் பல நல்ல நிறுவனங்கள் கூட பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு, கடைசியில் தொழிலை விட்டே போயுள்ளார்கள். அதுபோலத்தான் சினிமா தொழிலுக்கு இந்த பைரசி பிரச்னை பெரும் தலைவலியாக இன்றைக்கும் உள்ளது. ஒரு படம் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும்போது, படத்தை தியேட்டரில் ரெக்கார்ட் செய்து இணையத்தில் லீக் செய்யும் குற்றத்தச் செய்பவர்களால் படக்குழுவினர் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். அப்படியான பிரச்னையைத்தான், தற்போது புஷ்பா 2 திரைப்படம் எதிர்கொண்டுள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தின் HD பிரிண்ட் லீக்காகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புஷ்பா 2, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்து கடந்த 5ஆம் தேதி வெளியான படம். இந்தப் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. புஷ்பா 2 படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் அடுத்த பாகம். படத்தினை சுகுமார் இயக்கியுள்ளார். படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும், பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆனது.

allu arjun pushpa 2 2

படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இருந்தது. ஆனாலும் ரசிகர்களுக்கு திருப்திகரமான காட்சிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்ததால் படத்தின் நீளம் பெரும் பிரச்னையாக ரசிகர்களுக்குத் தெரியவில்லை. படம் இதுவரை ரூபாய் 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. படம் இன்னும் தியேட்டரில் வசூல் குவித்து வருகின்றது.

புஷ்பா 2: புஷ்பா 2 படம் அதன் ரிலீஸ் தேதியில் இருந்து அதாவது, டிசம்பர் 5ஆம் தேதியில் இருந்து, 56 நாட்களுக்குப் பின்னர், அதாவது 8 வாரங்களுக்குப் பின்னர் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இப்படியான நிலையில் படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

allu arjun pushpa 2 2

வசூலுக்கு தடங்கல்: இது தொடர்பான தகவல்கள் வெளியானதும், இணையவாசிகள் பலரும் புஷ்பா 2 படத்தின் HD பிரிண்டை இணையத்தில் தேடித்தேடி பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் கொடுத்துள்ளது. படம் ரூபாய் 2000 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்யும் என படக்குழுவினர் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில், படத்தின் வசூல் இந்த, HD பிரிண்ட் லீக் விவகாரத்தினால், சவாலைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பாக சைபர் க்ரைமில் புகார் அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைது: ஏற்கனவே, மலையாள நடிகர் டெவினோ தாமஸின் அஜயந்தே இரண்டாம் மோஷனம் படத்தினை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக, தமிழ்நாட்டினைச் சேர்ந்தபிரவீன் குமார் மற்றும் குமரேசன் என இரண்டு பேரை, கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதின்போது அவர்களிடத்தில் வேட்டையன் படத்தின் பைரசி காப்பியும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

allu arjun pushpa 2 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X