ரூல் செய்ய ப்ளான் போட்ட புஷ்பா! குறுக்கே வந்த தங்கலான்.. டிசம்பருக்கு தள்ளிப்போன ரிலீஸ் தேதி!
சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புஷ்பா படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

ரிப்பீட் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு வந்து கொண்டே இருந்ததால் படம் கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தியா முழுவதுமே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

உலகளாவிய ரசிகர்கள் பட்டாளம்: இந்தியா மட்டுமில்லாமல் புஷ்பா படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த படத்தின் பாடலுக்கு தனது குடும்பத்துடன் ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருந்தார். ஐசிசி உலக கோப்பை போட்டிகளில் வார்னர் விளையாடும் போதும் ஐபிஎல் போட்டிகளில் வார்னர் விளையாடும் போதும் புஷ்பா படத்தின் பாடல்களை மைதானத்தில் ஒலிக்க விட்டு அவர் நடனம் ஆடுவதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இந்த வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இது மட்டுமில்லாமல் புஷ்பா படம் குறித்து ஏதாவது அப்டேட் வந்தால் கூட வார்னர் அந்த அப்டேட் தொடர்பான விஷயங்களில் ஈடுபட தொடங்கினார். இப்படி புஷ்பாவிற்கு உலகளாவிய ரசிகர் பட்டாளமும் இருந்தது.

குறுக்கே வந்த தங்கலான்: இப்படியான நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு படத்தை பட குழு தயாரித்துள்ளது. புஷ்பா படத்தில் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்து இருந்தது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் தற்போது சினிமா வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று உலா வருகிறது. அது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகாமல், டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகின்றது என்பதுதான் அந்த தகவல்.

கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இயக்குநர் பா ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் ஆகும் என்ற தகவல் ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் பரவி வருவதால் புஷ்பா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றியுள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. இது புஷ்பா படத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்பு: புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகனாக வரும் அல்லு அர்ஜுன் செம்மரங்களை வெட்டி கடத்தும் ஒரு கடத்தல்காரர் ஆக வருகிறார். இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற படமானதால் வனத்துறை அதிகாரிகள் சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதாவது செம்மரங்களை கடத்துபவர்களை நாங்கள் எங்கள் உயிரை பணயம் வைத்து பிடிக்கின்றோம். செம்மர கடத்தல் காரர்களை பிடிக்கும் முயற்சியில் பல காவல்துறை அதிகாரிகள் தங்களது உயிரையும் தியாகம் செய்துள்ளனர். இப்படி இருக்கையில் ஒரு கடத்தல்காரனை ஹீரோ போல் சித்தரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று புஷ்பா படத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தையும் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











