Pushpa 2: புஷ்பா 2 படத்தை பங்கம் செய்த நினைத்தாலே இனிக்கும் சீரியல்.. இது ரொம்ப ஓவருங்க!
சென்னை: கடந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூலை இந்த அளவில் குவித்த படம் என்றால் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தினை மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தயாரித்தது, படம் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 1850 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் அல்லு அர்ஜுன் சீலை கட்டிக்கொண்டு நடனமாடியிருப்பார். அதேபோல் வேடமிட்டுக்கொண்டு, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரின் நாயகன் தொடரில் நடனமாடுவதைப்போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இணையத்தில் தங்களது எண்ணத்தினை பகிர்ந்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படத்தினை தயாரித்து வந்த படக்குழு, கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி படத்தினை ரிலீஸ் செய்தது. படத்திற்கு ரிலீஸ்க்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால் திரையிட்ட இடங்களில் வசூல் மழை பொழிந்தது. இதுமட்டும் இல்லாமல், படத்தின் வசூல் குறித்த தகவல்கள் ஓவ்வொரு நாளும் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டே இருந்தது.

படம் பக்காவான தெலுங்கு படம் என்பதற்கு ஏற்றவாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும், பின்னணிக்கு தமன் மற்றும் சாம் சி.எஸ்-உம் இசை அமைத்துள்ளார்கள். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் மொத்தம் 200 நிமிடங்கள் ஓடியது. அதாவது மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடியது. ஆனாலும் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.

புஷ்பா 2: படத்தின் க்ளைமேக்ஸில் மூன்றாவது பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் படத்தின் நேரத்தினை படக்குழு மேலும் அதிகரித்துள்ளது. புஷ்பா 2 படம் ஹிந்தி திரையுலகில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. குறிப்பாக படம் 31 நாளில் ரூபாய் 806 கோடிகளை இந்தியில் மட்டும் வசூல் செய்து சாதனை படத்துள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா ஓவர் கிளாமராக நடித்துள்ளார் என ரசிகர்கள் கூறுகின்றார்கள். குறிப்பாக ஃபீலிங்ஸ் பாடலில் ஓவர் கிளாமராக ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் உடனான நெருக்கமான காட்சிகளில் தாராள கிளாமர் காட்டியுள்ளார். படத்தில் ஸ்ரீலீலா கிஷ்க் என்ற பாடலில் கிளாமராக நடனமாடி இருந்தார். ஆனால், அந்த கிளாமரையும் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ராஷ்மிகா நடனமாடியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்தது. இன்ஸ்டாகிராமில் கிஷ்க் பாடலை ரிலீஸ் செய்தவர்களைக் காட்டிலும் பீலிங்ஸ் பாடலை ரீல்ஸ் செய்தவர்கள்தான் அதிகம்.
சீரியலில் புஷ்பா 2: சீரியல்களைப் பொறுத்தவரையில், சினிமா பாடல்களையும், பின்னணி இசைகளையும் பயன்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். அதேபோல், சில சீரியல்களில் சினிமா படக் காட்சிகளை அப்படியே ரீ கிரியேட் செய்வார்கள். அதேபோல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில், புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் சீலை அணிந்து கொண்டு பெண் வேடமிட்டு நடனமாடுவார். அதேபோல் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கமெண்ட்ஸ்: மேலும் பலர், தெலுங்கு சீரியல்களை விடவும் வேகமாக இருக்கின்றார்களே?, லோ பட்ஜெட் புஷ்பா 2 படமா?, செதச்சுட்டாங்க, என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை என்றெல்லாம் கமெண்ட் தெரிவித்து வருகின்றார்கள். இது பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications











