மீண்டும் சிக்கலில் அல்லு அர்ஜுன்.. நெரிசலில் சிக்கி கோமாவுக்குச் சென்ற சிறுவனுக்கு மூளைச்சாவு

ஹைதராபாத்: புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனதும்தான் ஆனது படத்தின் வசூல் ஒரு பக்கம் சாதனை மேல் சாதனைகளைப் படைத்து வந்தாலும் படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார். அதாவது கடந்த 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனது. படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றிப் படமாக மாறியது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாக தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபத்தினை ஈட்டிக் கொடுத்து வருகின்றது. இப்படியான நிலையில், படத்தில், நடித்த அல்லு அர்ஜுன் படம் ரிலீஸ் ஆன 5ஆம் தேதி படம் பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அந்த சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த தினத்தில், அதாவது, டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவினைக் காண ரசிகர்கள் ஹைதாராபாத் சந்தியா தியேட்டர் முன்னிலையில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு மட்டும், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல், அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரேவதி என்ற ரசிகை நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் அவரது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

allu arjun pushpa 2

இதனால் காவல்துறை அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்தது. இதனால், கடந்த 13ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதாவது 13ஆம் தேதி மதியம் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், 14ஆம் தேதி காலை, விடுவிக்கப்பட்டார்.

மூளைச் சாவு: அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்தாலும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மரணம் அடைந்த ரேவதி என்ற பெண்ணின் பக்கம் நின்று பேசினார். மேலும், சிகிச்சையில் உள்ள சிறுவனுக்கு ஆதரவாகவும் பேசினார். இப்படியான நிலையில், சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

allu arjun pushpa 2

மரணம்: மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டாலே, கிட்டத்தட்ட மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக மூளைச்சாவு அடைந்த ஒரு மனித உடலில் அடுத்தடுத்து உடல் பாகங்கள் செயலிழக்கச் செய்யும். ஆனால், அதற்குள் அந்த உடலில் இருந்து நல்ல நிலையில் உள்ள பாகங்களை மற்றவர்களுக்கு பொருத்தும் நோக்கில், எடுப்பார்கள். குறிப்பாக கண், கிட்னி போன்றவற்றைக் கூறலாம். ஆனால் தற்போது மூளைச்சாவு அடைந்திருப்பது சிறுவன் என்பதால், மருத்துவக்குழு என்னமாதிரியான அறிவுரைகளை வழங்கப்போகின்றார்கள் என்பது குறித்து பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். '

allu arjun pushpa 2

விமர்சனம்: அம்மாவைத் தொடர்ந்து மகனும் மரணத்தை தழுவவுள்ளதால் நெட்டிசன்கள் அல்லு அர்ஜுனை மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அல்லு அர்ஜுன் விளம்பரத்தை விரும்பக்கூடியவர். அவரது விளம்பர மோகத்தால் தற்போது இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளது என மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். சிறுவனும் மரணத்தை தழுவவுள்ளதால், அல்லு அர்ஜுனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தெலங்கானா போலீஸ் தரப்பில், அல்லு அர்ஜுன் ஜாமீன்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக பேச்சுகள் எழுந்து வருகின்றது.

allu arjun pushpa 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X