Pushpa 2: வந்துச்சே Peelings பாடல்.. மொத்த பாட்டும் அதைப்பத்திதான்.. கமெண்ட் செக்‌ஷனைப் பார்க்கனுமே!

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். படத்தினை சுகுமாறன் இயக்கினார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்தார். படத்தில் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் செம ஹிட் அடித்தது. இதனால் படம் பான் இந்தியா படமாக மாறியது. மேலும் இந்தப் படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் பான் இந்திய நடிகராக மாறினார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோசன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

புஷ்பா 2 படத்தினையும் முதல் பாகத்தைத் தயாரித்த மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை தமன் மற்றும் சாம் சி.எஸ் அமைத்துள்ளனர். படத்தின் இறுதிகட்ட ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் வெளியான கிஷ்க் பாடல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படியான நிலையில் படத்தில் இருந்து வந்துச்சே ஃபீலிங்ஸ் என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

allu arjun pushpa 2 2

புஷ்பா 2 படத்தினைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் படம் ரிலீஸ்க்கு முன்னரே ரூபாய் ஆயிரம் கோடிகள் வரை பிசினஸ் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் பெற்றதாக கூறப்படுகின்றது.

வந்துச்சே ஃபீலிங்ஸ்: இப்படியான நிலையில் படம் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கிஷ்க் பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது என்றுதான் கூறவேண்டும். இப்படியான நிலையில் நேற்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி வந்துச்சே ஃபீலிங்ஸ் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், மற்றொரு தரப்பில் பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

allu arjun pushpa 2 2

இரட்டை அர்த்தம்: அதாவது வந்துச்சே ஃபீலிங்ஸ் பாடல், இரட்டை அர்த்த வரிகளால் வெளிப்படையாக கூறும் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் இசை வேகம், பாடலுக்காக அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடனம் பெரும்பாலான ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது. ஆனால் பாடல் வரிகள் வெளிப்படையாகவே இரட்டை அர்த்த வசனம் கொண்டதாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

விமர்சனங்கள்: இந்தப் பாடலைக் கேட்ட ரசிகர்கள் பாடலின் கமெண்ட் செக்‌ஷனில் இந்தப் பாடலை எப்படி குடும்பத்துடன் அமர்ந்து கேட்பது, தேவி ஸ்ரீ பிரசாத் அட்டூழியங்கள், பாடலாசிரியர் விவேக் என்ன செய்து வெச்சு இருக்கீங்க” என்பது போன்ற கேள்விகளை கமெண்ட் செக்‌ஷனில் கேட்டு வருகின்றனர். மேலும் பாடலைப் பாடிய ராஜலஷ்மி மற்றும் செந்தில் கணேஷ்க்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். பாடல் இதுவரை தமிழில் மட்டும் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்ட் ஆகிக் கொண்டு உள்ளது.

allu arjun pushpa 2 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X