Don't Miss!
- Finance
சுந்தர் பிச்சையை பணி நீக்கம் செய்யுங்கள்.. கூகுளின் பணி நீக்க அறிவிப்பால் கடுப்பான சிங்..!
- News
"தாய் மாதிரி".. பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்தாலே எல்லா பிரச்சனையும் சரியாகிடும்! குஜராத் நீதிமன்றம்
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிகமாக தேடப்பட்ட பாடல்.. முதல் 10 இடத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி!
சென்னை : நடிகர் அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான படம் புஷ்பா.
சிவப்பு சந்தன மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அல்லு அர்ஜுன்.
இந்தப் படம் கடந்த ஆண்டில் மட்டுமில்லாமல் இந்த ஆண்டிலும் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வந்தது.
அச்சச்சோ..
கழண்டு
விழும்
டவலை
பிடித்துக்
கொண்டே
செல்ஃபி..
பயல்
ராஜ்புத்
பதறிட்டாங்க!

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன் அழகான நாயகனாக அலா வைகுந்தபுரமுலு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், கரடுமுரடான வேடத்தில் அவர் நடித்திருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தில் லாரி ஓட்டுநராக, சிவப்பு சந்தன மரக்கடத்தலில் ஈடுபடுபவராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். படம் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தப் படத்தில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்கள் இருந்தன. படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து படத்திற்கும் பலம் சேர்த்திருந்தார். இதேபோல படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டிருந்தார் நடிகை சமந்தா. இதேபோல போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் பகத் பாசில்.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்
இதேபோல படத்தில் ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனன்ஜயா, அனுசுயா பரத்வாஜ், அஜய் மற்றும் அஜய் கோஷ் போன்றவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த ஆண்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றன. குறிப்பாக அல்லு அர்ஜுனின் ஸ்ரீவள்ளி பாடல் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்தப் பாடலில் உடலை இழுத்து அவர் போடும் ஸ்டெப்பை ட்ரை செய்யாதவர்கள் குறைவு என்னும்படியாக இந்தப் பாடல் அமைந்தது. படத்தின் இந்தப் பாடல் மட்டுமில்லாமல் சாமி பாடல், ஊ சொல்றியா பாடல் என அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

சர்வதேச அளவில் தேடப்பட்ட ஸ்ரீவள்ளி பாடல்
இதனிடையே ஸ்ரீவள்ளி பாடல் சர்வதேச அளவில் 2022ம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த 2022ம் ஆண்டின் ரசிகர்களின் மிகச்சிறந்த தேடலை பெற்ற பாடல்களின் லிஸ்டை கூகுள் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. இதில் 10வது இடத்தில் ஸ்ரீவள்ளி பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் அலி சேத்தியின் பசூரி பாடல் முதலிடத்தில் உள்ளது.

ஸ்ரீவள்ளி இந்தி பாடல்
இந்தப் பாடல் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில், இந்தியில் ஜாவித் அலி பாடிய பாடல்தான் சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்து 10வது இடத்தில் உள்ளது. தெலுங்கில் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். வெளியான அனைத்து மொழிகளிலும் இந்தப் பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் வெளியாகி 375 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் எட்டிய புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தை விடவும் இந்த பாகத்தில் சிறப்பான காட்சிகளையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் முயற்சியில் சுகுமார் ஈடுபட்டுள்ளார்.