ராஷ்மிகா காலில் முகம் புதைத்த அல்லு அர்ஜுன்.. இவங்க ரொமான்ஸ் புஷ்பா 2ல அதிகமாத்தான் இருக்கும் போலயே?

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில் ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்களுடன் அவர் இணைந்து நடித்து வெளியான புஷ்பா படம் அதிரபுரி வெற்றியை கொடுத்தது. சர்வதேச அளவில் 500 கோடிகளை தாண்டி இந்த படம் வசூலித்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் சுகுமார் இயக்கத்திலேயே உருவாகியுள்ளது.

வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக படத்தின் பாடல்கள், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

allu arjun rashmika mandanna pushpa 2 movie

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் டோலிவூட்டில் முன்னணி நடிகராக இருந்த போதிலும் பான் இந்தியா ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது புஷ்பா படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்ததாக புஷ்பா 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பான் இந்தியா படமாகவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிகளில் இந்த படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை அடுத்தடுத்து படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புஷ்பா 2 படம்: புஷ்பா 2 படத்தின் பாடல்கள், கிளிம்ப்ஸ், டீசர் என அடுத்தடுத்து வெளியான நிலையில் இன்றைய தினம் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. இந்த ட்ரெயிலரை பார்க்கும்போது முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் சிவப்பு சந்தன கடத்தல் செய்யும் கேங்ஸ்டராக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அடுத்தடுத்து சிறப்பை சேர்க்கும் வகையில் இயக்குநர் சுகுமார் அதிகமான உழைப்பை போட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் -ஸ்ரீலீலா ஆட்டம்: கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் பாடல் உள்ளிட்ட சில காட்சிகளை எடுக்கும் வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது டிசம்பர் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் முதல் பாகத்தை காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தில் சமந்தா அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஐட்டம் டான்ஸ் செய்த நிலையில் தற்போது இந்த பாகத்தில் நடிகை ஸ்ரீலீலா ஆட்டம் போட்டுள்ளார். இதே போல முதல் பாகத்தில் சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த பாகத்திலும் அதே போன்ற பாடலை இயக்குநர் அமைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் & ராஷ்மிகா மந்தனா: இந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. முதல் பாகத்தில் இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இந்த பாகத்திலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது அதிரடியாக வெளியாகி உள்ளது. இதில் சந்தன கடத்தல் தொடர்பான காட்சிகள் காணப்படுகின்றன. மேலும் பகத் ஃபாசில் மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான காம்பினேஷன் காட்சிகளும் மிரட்டலாக காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனனின் மனைவியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

allu arjun rashmika mandanna pushpa 2 movie

காலில் முகம் புதைத்த அல்லு அர்ஜுன்: அந்த வகையில் இவர்களின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிகச் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரில் மாற்றி மாற்றி இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்வதும், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கால்களில் தன்னுடைய முகத்தை அல்லு அர்ஜுன் புதைத்துக் கொள்வதும் என அடுத்தடுத்த ரொமான்ஸ் காட்சிகளை பார்க்க முடிகிறது. முதல் பாகத்திலேயே இவர்களின் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்து சாமி பாடலிலும் அது வெளிப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது பாகத்திலும் இவர்களின் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவரும் என்று இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X