Pushpa 2 Box Office Day 3: பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்னா இப்படி இருக்கனும் பாஸ்.. 3 நாளில் புஷ்பா 2 வசூல்
சென்னை: ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே, தற்போது பேசிக்கொண்டு இருக்கும் முக்கியமான விஷயங்களில் புஷ்பா 2 வசூல் விவகாரத்திற்கு முக்கியமான இடம் உண்டு. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால், படத்தின் ப்ரீ புக்கிங் இந்தியா முழுவதும் சிறப்பாகவே இருந்தது. இதுமட்டும் இல்லாமல், படம் ப்ரீ ரிலீஸுக்கு முன்னதாகவே ரூபாய் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்து விட்டது. படம் வெளியாகி இன்றுடன் அதாவது டிசம்பர் 8ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகும் நிலையில், முதல் மூன்று நாள் வசுல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல், புஷ்பா படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக தெலுங்கு சினிமா உலகில் மட்டும் இல்லாமல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் வசூல் வேட்டையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இதனால் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. படத்தில் நடித்த அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா என எல்லோரது நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் இருந்து ஒரு நடிகர் தேசிய விருது வாங்குவது, இதுவே முதல் முறையாக வரலாற்றில் இடம் பெற்றது.

அதேபோல், படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, அனைவரையும் கவர்ந்தது. பாடல்கள் செம ஹிட் அடித்தது. படத்தில் இடம் பெற்ற, ஸ்ரீ வள்ளி பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தில் இடம் பெற்ற, ஊ சொல்றியா மாமா பாடல் புஷ்பா படத்தினை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக சமந்தாவின் கவர்ச்சியான நடனத்தைப் பார்க்கவே பல ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தார்கள் எனலாம்.
புஷ்பா 2: இப்படியான நிலையில் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. ரூபாய் 500 கோடிகளுக்கு மேல், செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் சம்பளம் மட்டும் ரூபாய் 300 கோடிகள் எனக் கூறப்பட்டு வருகின்றது. படத்தின் ட்ரைலரை படக்குழு பாட்னாவில் ரசிகர்கள் முன்னிலையில் ரிலீஸ் செய்தது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. ட்ரைலருக்கும் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை: படம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனதில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் குவித்து வருகின்றது. குறிப்பாக இந்திய சினிமாவிலேயே, முதல் நாளில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படம் பெற்றது. முதல் நாளில் மட்டும் படம் ரூபாய் 294 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. படத்திற்கு முதல் நாளில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படத்தினைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததால், படத்தின் வசூலில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், ஜெட் வேகத்தில் நகர்ந்தது பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்.
3 நாள் வசூல்: படம் இரண்டாவது நாளில் ரூபாய் 449 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்திற்கு வார நாட்களிலேயே நல்ல வசூல் கிடைத்துவிட்டதால், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் மத்தியிலும் படத்தினை ரிப்பீட்டாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ரசிகர்களால், திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள்தான் ஓடிக்கொண்டு உள்ளது. இதனால் படம் மூன்றாவது நாளான நேற்று அதாவது டிசம்பர் 7ஆம் தேதி மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 120 கோடிகள் வசூல் குவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் நேற்று ஒருநாள் மட்டும் ரூபாய் 150 கோடிகள் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் படம் முதல் மூன்று நாட்களில், கிட்டத்தட்ட ரூபாய் 600 கோடிகள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் மூன்று நாளில் ரூபாய் 600 கோடிகளை வசூல் செய்த படமாக இப்படம் உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











