Pushpa 2 Box Office Day 5: பேயாட்டம் ஆடும் புஷ்பா 2.. 1000 கோடிகளை நெருங்கி ராஜ வசூல்.. விவரம்!

சென்னை: அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. 2021ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால், படத்திற்கு வசூலும் நாளுக்கு நாள் தாறுமாறாக எகிறிக் கொண்டு உள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் என பல ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் அதாவது டிசம்பர் 10ஆம் தேதியுடன் 6 நாட்கள் ஆகின்றது. இதனால், படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு, அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் இந்தியா முழுவதும் மாபெரும் ஹிட் படமாக மாறியதால், வசூலிலும் வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணியை படக்குழு உடனே தொடங்கியது. இதனால் அல்லு அர்ஜுன் மாற்றுப் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். புஷ்பா படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியதால், அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது.

allu arjun rashmika mandanna pushpa 2 box office 2

இப்படியான நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், படக்குழு படத்தினை அவசரமாகக் கொடுக்காமல், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு படத்தின் படப்பிடிப்பினை நடத்தியது. இத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் திருப்தி அளிக்கும் விதமாக அமைந்து ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமர்ஷியல் படம் என்றாலே லாஜிக்குகளை விட்டுவிடவேண்டும் என நமது ரசிகர்களுக்கு எப்போதுதே தெரிந்ததுதான். ஆனால், தெலுங்கு மசாலா படம் என்றால் சொல்லவா வேண்டும்.

மிஸ்டேக்ஸ்: குறிப்பாக சண்டைக் காட்சிகளில் தெலுங்கு மசாலாவை கச்சிதமாக இறக்கியுள்ளார் இயக்குநர் சுகுமார். படத்தில் இருக்கும் பிரச்னை என்றால் அது, கிளாமரான பாடல், அதைவிட கிளாமரான நடன அசைவுகள் ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், படத்தின் நீளம் பெரும் விவாதத்திற்கு உரியதுதான். படத்தில் இடம் பெற்ற பீலிங்ஸ் பாடலை நீக்கி இருந்தாலும் சரி, படத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத கிஷ்க் பாடலையும் படத்தில் இருந்து நீக்கி இருக்கலாம் என யோசிக்க வைக்கின்றது. அதேநேரத்தில் படக்குழு வியாபார யுத்தியுடன் செயல்படுகின்றதோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. குறிப்பாக, புஷ்பா 3 படத்திற்கு கொடுக்கப்பட்ட லீட் என்பது, கொஞ்சம் கூட உப்பு சப்பு இல்லாமல் இருந்தது.

allu arjun rashmika mandanna pushpa 2 box office 2

வசூல்: படத்தில் இப்படியான பிரச்னைகள் பல இருந்தாலும், படம் ரசிகர்களுக்கு திருப்திகரமான ஒன்றாக அமைந்துவிட்டதால், படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. முதல் நாளே வசூலில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் எந்த படமும் எட்டாத சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. முதல் நாள் மட்டும் ரூபாய் 294 கோடிகள் வசூல் குவித்து பாகஸ் ஆபிஸையே அதிரச் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

allu arjun rashmika mandanna pushpa 2 box office 2

1000 கோடி: படம் வெளியாகி இன்றுடன் அதாவது டிசம்பர் 10ஆம் தேதியுடன் 6 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக படத்தின் இந்திய அளவிலான வசூல் யாருமே எதிர்பார்க்காத வசூலாக மாறி வருகின்றது. படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 829 கோடிகள் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளில் படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 கோடிகள் வசூல் குவித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வெளிநாட்டில் கிட்டத்தட்ட 30 முதல் 35 கோடிகள் வரை வசூல் குவித்திருக்கும் எனவும் கூறப்படுகின்றது. இதனால் படம் முதல் 5 நாளில் ரூபாய் 930 முதல் ரூபாய் 935 கோடிகள் வரை வசூல் குவித்திருக்கும் என கூறப்படுகின்றது. படத்தின் வசூல் இன்று அதாவது 10 தேதியே ரூபாய் 1000 கோடிகளைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

allu arjun rashmika mandanna pushpa 2 box office 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X