Pushpa 2 Box Office: ஒரு வார வசூல்.. வாயைப் பொளந்துட்டுப் பார்க்கும் இந்திய சினிமா..புஷ்பா 2 சாதனை
சென்னை: இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக மட்டும் இல்லாமல், இதுவரையிலான இந்திய சினிமா வரலாற்றில் பிரமாண்டமான வெற்றிப் படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மாறியுள்ளது. படம் 6 நாளில் ரூபாய் 1002 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் அதிவேகமாக ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்தில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
புஷ்பா 2 திரைப்படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் சீக்வலாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆங்காங்கே லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ரசிகர்கள் பலர் ரிப்பீட் ஆடியன்ஸாக மாறிவிட்டார்கள். படம் 3டி தொழில் நுட்பத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. படத்தில் இடம் பெற்ற இரண்டு கிளாமர் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் சில காட்சிகளை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியாது என ரசிகர்களே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ராஷ்மிகா மந்தனாவின் தாராள கிளாமர் காட்சிகளும் நடனமும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் அவரது சில காட்சிகள் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.
பண மழை: படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சம்பளமாக மட்டும் ரூபாய் 300 கோடிகள் வழங்கப்பட்டதாக ஒரு பேச்சு திரையுலகில் ஓடிக்கொண்டு உள்ளது. படம் ரிலீஸ்க்கு முன்னரே ரூபாய் 1000 கோடிகளுக்கு வியாபாரம் செய்தது. படத்தினை உருவாக்க தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பண மழையையே கொட்ட ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. ஒவ்வொரு காட்சியும் மிகவும் பிரமாண்டமாக அதேநேரத்தில் ஏற்புடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை: இப்படியான நிலையில் படம் வெளியான நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டுள்ளது. ரிலீஸ் ஆன நாளில் படம் ரூபாய் 294 கோடிகளை வசூல் செய்தது. புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், தியேட்டர்களின் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. படத்திற்கு இதுவரை வந்த வசூலில் இந்தி திரையுலகில் படத்திற்கு நல்ல வசூலைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

1000 கோடிகள்: படம் முதல் நாளில், 294 கோடிகளிலும், இரண்டாவது நாளில், 449 கோடிகளும், மூன்றாவது நாளில், 621 கோடிகளும், நான்காவது நாளில் 829 கோடிகளும் ஐந்தாவது நாளில் 922 கோடிகளும் வசூல் குவித்ததாக, படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இப்படியான நிலையில், புஷ்பா 2 ஆறு நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 1002 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இப்படியான நிலையில், படம் முதல் வாரத்தில் அதாவது முதல் 7 நாட்களில் ரூபாய் 1055 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











