Pushpa 2: கமல்ஹாசன் சம்பளத்தை விட அதிகம்.. புஷ்பா 2 படத்திற்கு ப்ரோமோசனுக்கு மட்டும் இத்தனை கோடிகளா?

சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புஷ்ப படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. முதல் படத்தின் முடிவிலேயே இரண்டாவது படத்துக்கான லீட் கொடுக்கப்பட்டது. புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோசனுக்காக படக்குழு மிகப்பெரிய தொகையை செலவு செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவீஸ் திட்டமுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலில் படத்தினை வரும் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு ஏற்கனவே தெரிவித்த நிலையில் அதற்கான, புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. ஆனால் அதன் பின்னர் படத்தினை ஒரு நாள் முன்னதாக, அதாவது டிசம்பர் 5ஆம் தேதி ரீலீஸ் செய்யப்படுவதாக படக்குழு தெரிவித்தது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இடையில் உள்ள நிலையில் படக்குழு இந்தியா முழுவதற்கும் பயணம் செய்து ப்டத்தினை புரோமோட் செய்யத் திட்டமிட்டு வருகின்றது.

allu arjun pushpa 2 pushpa 2 promotion 2

புஷ்பா படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால் படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது இல்லாமால் ஓடிடி பிஸ்னஸ் என படம் சக்கை லாபம் பார்த்தது. இந்தியா முழுவதுமே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ட்ரைலர்: இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் சம்பளம் ரூபாய் 300 கோடிகள் என்றத் தகவலும் வெளியானது. மேலும் படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் எனவும், தகவல்கள் வெளியானது. படத்தின் ட்ரைலர் இன்று மலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலரை உலக அளவில் ட்ரெண்ட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரிடமும் இது தொடர்பாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

150 கோடிகள்: மேலும் படத்தின் ப்ரோமோசனுக்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் படத்தின் பேனர்களை அடித்து வைக்கவும், பல முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்யவும், பல்வேறு சேனல்களுக்கு சிறப்பு பேட்டி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்களில் படத்தின் விளம்பர பதாகைகளை வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கமல் சம்பளம்: மேலும் இதற்காக படக்குழு ரூபாய் 150 கோடிகளை செலவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தொகை பல தென்னிந்திய பிரபல நடிகர்களின் ஒரு படத்திற்கான சம்பளத்தை விட அதிகம் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக கமல்ஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தைவிட இந்தப் படத்தின் ப்ரோமோசனுக்காக செலவிடப்படும் தொகை மிகவும் அதிகம் எனக் கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X