Pushpa 2: போட்ரா வெடிய.. புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது.

Allu Arjun, Rashmika Mandanna Pushpa 2 release date announced

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.

பல கோடி வசூல்: புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் காரராகவும் நடித்திருந்தார். அல்லு அர்ஜூனின் பாடி லாங்குவேஜ், பேச்சு என அனைத்தும் தரமானதாக இருந்தது. உலகம் முழுவதும் இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம், அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி வசூலித்து பாலிவுட்டை வாய்பிளக்க வைத்தது.

புஷ்பா 2 டிரைலர்: இதையடுத்து புஷ்பா 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. அந்த டிரைலரில், சிறையில் இருந்து தப்பிச்சென்ற புஷ்பாவை காவல்துறையினர் சுட்டுகொன்று விட்டனர் என்றும், புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் செய்தி பரவி வருகிறது. இதனால், புஷ்பாவின் ஆதரவாளர்கள் கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: ஆனால், புலிக்காக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புஷ்பா இருப்பதை பார்த்த பொதுமக்கள் புஷ்பா உயிருடன் தான் இருக்கிறார் என்று ஆனந்த கூத்தாட்டம் போடுகிறார். இந்த டிரைலர் வெளியான போதே படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஒரு சில பிரச்சனையால் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் பார்க்க இன்னும் ஒரு வருஷம் காத்து இருக்கனுமா என சில ரசிகர்கள் நொந்து போனார்கள். இன்னும் சிலரோ படம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X