Pushpa 2 Public Review: தமிழ்நாட்டில் எடுபட்டதா புஷ்பாவின் ஆட்டம்.. பொதுமக்கள் விமர்சனம் இதோ!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரையில், ஒரு படத்தின் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால், அந்தப் படத்தை கொண்டாடிவிடுவார்கள். அப்படி தமிழ்நாட்டில் பல வெளிமாநிலப் படங்கள் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தங்கல், பாகுபலி 1,2, கே.ஜி.எஃப் 1,2, மஞ்சுமெல் பாய்ஸ் போன்றப் படங்களைக் குறிப்பிடலாம். இந்த லிஸ்ட்டில் இடம் பெறும் மற்றொரு படம் புஷ்பா. இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியானபோதே, தமிழ்நாடு ரசிகர்கள் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்கள். இதனால் புஷ்பா 2 படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை சுகுமாறன் இயக்கியுள்ளார். படத்தினை தமிழ்நாட்டில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 800 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்த தமிழ்நாட்டு மக்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

படம் பார்த்த தமிழ்நாடு மக்கள் கூறுகையில், " புஷ்பா படத்தின் முதல் பாகம் பார்த்தபின் ஏற்பட்ட எதிர்பார்ப்பினை இரண்டாம் பாகத்தில் பூர்த்தி செய்துள்ளனர். பல காட்சிகள் மிரட்டலாக உள்ளது. ஃபகத் ஃபாசில் நடிப்பில் மிரட்டுகின்றார். இந்தப் படத்தில் அவர் மிகவும் பவர் ஃபுல்லான கதாபாத்திரமாக காட்டப்படுகின்றது. அது படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. மூன்றாவது பாகத்துக்காக இவர்கள் கொடுக்கும் லீட் மட்டும்தான் படத்தில் மைனஸ். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்லும் கதைக்கு படம் சிறப்பாகவே உள்ளது" எனக் கூறினர்.
வல்கர்: அதேபோல் மற்றொருவர் கூறுகையில், புஷ்பா படத்தில் ஐட்டம் பாடல் என்றாலே அது, சமந்தாவின் பாடல்தான் ஹைலைட். இந்தப் படத்தில் ஸ்ரீலீலா ஆடியுள்ள பாடல் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. அதேபோல் ஃபீலிங்ஸ் பாடல் மட்டும் மிகவும் வல்கராக உள்ளது. அவற்றைத் தவிர்த்திருக்கலாம். குடும்பமாக இந்தப் படத்தைப் பார்க்கமுடியாது" எனக் கூறினார்.

வில்லன்: படத்தில் பல எமோஷ்னலான காட்சிகள் உள்ளது. படத்தில் ஃபகத் ஃபாசிலை மிகவும் மாஸாக காட்டி டக்குனு முடித்துவிட்டார்கள். மூன்றாவது பாகத்திற்கான லீட் கொடுக்கின்றார்கள். அதில் வில்லன் ஒருவரைக் காட்டுகின்றார்கள், அது யார் எனத் தெரியவில்லை. படத்தின் பி.ஜி.எம் நன்றாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே சூப்பர் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

லேக்: படம் நன்றாக உள்ளது. படம் ரொம்ப நேரம் இருப்பதைப்போல் தெரியவில்லை. ஃபகத் ஃபாசில் மிரட்டியுள்ளார். முதல் பாகத்தில் பாடல்கள் இருக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் இல்லை. படத்தில் மெசேஜ் எல்லாம் எதுவும் சொல்லவில்லை. படம் நிண்ட நேரம் ஓடுவதைப்போல் இல்லை. படத்தில் கொஞ்சம் லேக் இருந்தாலும், படமாக இது நன்றாக உள்ளது" என கூறியுள்ளனர். படம் தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் வசூலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











