Pushpa 2 Public Review: புஷ்பா 2 பத்திக்கிச்சா? இல்ல.. பதறவெச்சுச்சா? ரசிகர்கள் சொல்வது என்ன?
சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் இன்று அதாவது டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் புஷ்பா 2. இந்தப் படத்தினை மைத்ரீ மூவீஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் செலவு செய்து படத்தினை தயாரித்துள்ளது. புஷ்பா படத்தினை இயக்கிய சுகுமாரன், இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல்,படத்தின் பின்னணி இசையை தமன், மற்றும் சாம் சி.எஸ். அமைத்துள்ளனர்.
இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை சிறப்புக் காட்சிகளில் பார்த்த ரசிகர்கள், படம் குறித்து தங்களது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் படத்தை ரிலீஸ் செய்கின்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 800 தியேட்டர்களுக்கு மேல் இந்தப் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

படம் பார்த்த் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர்கள் படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறினார்கள். குறிப்பாக, " படம் அருமையாக இருக்கின்றது. படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு சிறப்பாக உள்ளது. உண்மையாலுமே வைல்ட் ஃபயர்தான். ஸ்ரீலீலா வரும் ஐட்டம் பாடல் அட்டகாசமாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் அல்லு அர்ஜுன் நன்றாகவே நடித்துள்ளார். படம் 3.30 மணி நேரம் ஓடினாலும், மாஸ் காட்சிகளால் படம் நிறைந்துள்ளது. பார்ட் 3காக காத்துக் கொண்டு இருக்கின்றோம். ராஷ்மிகா மந்தனா நன்றாக நடித்துள்ளார். மீண்டும் மீண்டும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கலாம். அந்த அளவுக்கு இந்தப் படம் உள்ளது. பார்ட் 3க்காக காத்துக் கொண்டு இருக்கின்றோம்" என படம் குறித்து சிலாகித்து கூறினார்கள்.

குடும்ப செண்டிமெண்ட்: அதேநேரத்தில் பொதுமக்கள் மத்தியில் அதாவது சினிமா ரசிகர்கள் மத்தியில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளது. அது குறித்தும் பார்க்கலாம். அதாவது, படம் நன்றாக இருக்கின்றது. ஆனால் படத்தில் ஆங்காங்கே கொஞ்சம் லேக் (திரைக்கதை தொய்வு) இருக்கின்றது. கடைசி 45 நிமிடங்கள் குடும்ப செண்டி மெண்ட்டை வைத்து மிகவும் டார்ச்சர் செய்துவிட்டார்கள். இதுபோன்ற படத்திற்கு க்ளைமேக்ஸ் எப்படி இருக்கவேண்டும், தியேட்டரே அதிரும் அளவுக்கு இருக்க வேண்டும் இல்லையா?, ஆனால் புஷ்பா 2வின் க்ளைமேக்ஸ் அப்படி இல்லை" என ஒருவர் கூறினார்.

ரன்னிங் டைம்: அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, " படம் 3.30 மணி நேரம் ஓடுவது படத்திற்கு பின்னடைவுதான். காரணம் புஷ்பா படத்தில் எப்படி செம்மரங்களை வெட்டிக் கடத்தினாரோ, அதேபோல், இந்தப் படத்திலையும் வெட்டிக் கடத்துகின்றார். அப்படி இருக்கும்போது, இந்தப் படத்தில் புதிதாக எதுவும் இல்லை. அதனால், 3.30 மணிநேரம் உட்கார முடியவில்லை. அல்லு அர்ஜுன் மட்டும் இல்லை ஒட்டுமொத்த படக்குழுவுமே சிறப்பாக நடித்துள்ளார்கள். ஆனால் படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்" எனக் கூறினார்.

போதும்: மற்றொருவர் படம் குறித்து பேசும்போது, " படத்தின் நீளம் பெரிய தொந்தரவாக இல்லை. ரசிகர்களை படம் தியேட்டரில் உட்கார வைக்கின்றது என்றாலே, அதுவே போதும். அந்த வகையில் புஷ்பா 2 படத்தில் ஆங்காங்கே வரும் சில மாஸ் காட்சிகள், ரசிகர்களை உட்காரவைத்து விடுகின்றது. பின்னணி இசை நன்றாக இருக்கின்றது. ஒருமுறை படத்தை தாராளமாக பார்க்கலாம். கேமரா ஒர்க் நன்றாக உள்ளது" என பேசினார். ரசிகர்கள் மத்தியில் படம் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவருவதால், படம் வெற்றிப் படமாக மாறும் என்ற பேச்சு திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.



Click it and Unblock the Notifications