Pushpa 2: பாட்டு வரிகளை விட நடன அசைவுகள் மோசம்டா.. புஷ்பா 2வை வெளுக்கும் ரசிகர்கள்!

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் வரும் ஐந்தாம் தேதி அதாவது நாளை மறுநாள் ரிலீசாக உள்ள படம் புஷ்பா 2. இந்த படத்தை சுகுமாரன் இயக்கி உள்ளார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாடல்களை தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணி இசையை தமன் மற்றும் சாம் சி.எஸ் ஆகியோர் அமைத்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை அடுத்து பட குழு படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக ரிலீஸ் செய்து வருகின்றது. இதில் கடைசியாக ரிலீஸ் செய்யப்பட்ட பீலிங்ஸ் பாடல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பி உள்ளது. அது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றாலே இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் அட்டகாசமான நடன அசைவுகளை அவர் வெளிப்படுத்தி விடுவார். தெலுங்கு சினிமாவில் இவர் அளவுக்கு நடனமாடும் நடிகர்கள் இல்லை என கூறும் அளவுக்கு திறமையான நடிகராக இவர் விளங்குகிறார். அதேபோல் புஷ்பா படத்திலும் இடம்பெற்றுள்ள பாடல்களில் அட்டகாசமான நடன அசைவுகளை அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புஷ்பா 2 படத்தின் இரண்டு பாடல்களிலும் இவரது நடன அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பி உள்ளது.

allu arjun rashmika mandanna pushpa 2

அதாவது, கடைசியாக வெளியிடப்பட்ட பீலிங்ஸ் பாடலில் இவர் ராஷ்மிகா மந்தனாவுடன் நடனமாடுகின்றார். ஏற்கனவே பாடலில் வரிகள், மிகவும் ஆபாசமாக அதுவும் இரட்டை அர்த்தம் பொருந்தியதாக இருப்பதாக இணையவாசிகளும் ரசிகர்களும் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது பாடலின் நடன அசைவுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையைக் கிளப்பியுள்ளது.

allu arjun rashmika mandanna pushpa 2

அதிருப்தி: அதாவது ஒரு படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு, வசன உச்சரிப்பு, நடனம், சண்டைக் காட்சிகளில் அவர்களது ஈடுபாடு ஆகியவற்றை ரசித்து பார்ப்பார்கள். ஆனால் தற்போது புஷ்பா பட குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள பீலிங்ஸ் பாடலின் நடன அசைவுகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இப்படியான நடன அசைவுகளை அல்லு அர்ஜுனுக்கு கொடுக்க எப்படி அந்த நடன மாஸ்டருக்கு தோன்றியது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

allu arjun rashmika mandanna pushpa 2

நடன அசைவுகள்: சிறந்த நடனத்தை தனது படங்களில் எப்போதும் வெளிப்படுத்தும் அல்லு அர்ஜுன் ஏன் இந்தப் பாடலுக்கு இப்படி ஆபாசமாக நடனமாட ஒப்புக்கொண்டார் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற கேள்விகள் பட குழுவினரை கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே வெளியான கிஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் பட குழு என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

allu arjun rashmika mandanna pushpa 2

தப்பித்த டி.எஸ்.பி: புஷ்பா 2 படத்தின் பாடல்கள் மொத்தமும் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இப்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 90 கோடி ரூபாயிலிருந்து சில கோடிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுகின்றன. அதிலும் ரசிகர் மத்தியில் இருக்கக்கூடிய அதிருப்தியானது பாடல் வரிகள் மற்றும் நடன ஆசிரியர்களை மையப்படுத்தி இருக்கின்றது. ஆனால் பாடலைக் கேட்ட பலரும் தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் சில ரசிகர்கள் பாலிவுட் படங்களில் இடம் பெறும் நடன அசைவுகளின் தாக்கம் இந்தப் பாடல்களில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X