Pushpa 2: கங்குவா எதிரொலியா? தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு அடுத்த அடி.. புஷ்பா 2வில் என்னதான் நடக்குது?
சென்னை: கங்குவா படம் ரிலீஸ்க்குப் பின்னர் படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்றாலே திரையுலகில் பலருக்கும் பயம் வருதோ இல்லையோ, ரசிகர்கள் இரண்டு அடி பின்னால் செல்கின்றனர். அதற்கு காரணம் ரசிகர்கள் காது வலிக்குது எனக் கதறும் அளவிற்கு இருந்த அவரது பின்னணி இசைதான். பல வெற்றி படங்களுக்கு இன்றைக்கும் நினைவில் இருக்கும் அளவுக்கு பின்னணி இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்தா இப்படியான பின்னணி இசையை அமைத்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இப்படியான நிலையில் இவரது இசையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள மிகப்பெரிய படம் புஷ்பா 2. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த கங்குவா படத்தில் இவரது பின்னணி இசை கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால், இந்தப் படத்தில் என்ன செய்து வைத்துள்ளாரோ என்ற கேள்வி பலருக்கும் இப்போது வரை இருந்து வருகின்றது.
ஆனால், படக்குழு தரப்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் இப்போதே அந்தப் பாடல்களில் லட்சக்கணக்கான ரீல்ஸ்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பாட்னாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படியான நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான கிஷ்க் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தேவி ஸ்ரீ பிரசாத்: இது படக்குழுவினர் மட்டும் இல்லாமல், தென்னிந்திய திரையுலகினைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்தது. குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது தேவி ஸ்ரீ பிரசாத் எங்களுக்கு நாங்கள் கேட்ட போது இசை அமைத்துக் கொடுக்கவில்லை, எனக் கூறியிருந்தார். இதற்கு அதேமேடையில் பதில் அளித்த தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளரை மட்டும் இல்லாமல், அனைவரையும் அதிரவைத்தார். குறிப்பாக அவரது பேச்சில், தன்னை ஏன் புஷ்பா 2 படத்தின் பின்னணி இசை அமைக்க வேண்டாம் எனக் கூறினீர்கள் அதற்கான காரணம் என்ன? என்றெல்லாம் கேட்காமல் கேட்டிருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத்.
சாம் சி.எஸ்.: இது தொடர்பாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக, புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையினை தமன் அமைக்கின்றார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். தனது எக்ஸ் பக்கத்தில் புஷ்பா 2 படத்தின் பின்னணி இசைப்பணிகள் முடிவடைந்துவிட்டதாக பதிவிட்டார். இந்தப் பதிவு தற்போது வேகமாக பரவி வருகின்றது. மொத்தத்தில் புஷ்பா 2 படத்தின் பின்னணி இசைக்காக தமன் மற்றும் சாம் சி.எஸ். என இருவரும் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை என்பது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்தப் படத்திலும் சிறப்பாகவே பணியாற்றியிருப்பார் என ரசிகர்கள் நம்புகின்றார்கள்.
தேசிய விருது: தேவி ஸ்ரீ பிராசத்தின் மேடைப்பேச்சு, தயாரிப்பாளருக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் விதமாக இருந்ததால், மைதிரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தில் இருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் அதிடியாக நீக்கபடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கங்குவா படத்தின் பின்னணி இசை குறித்த விமர்சனங்கள் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை பல வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அதேநேரத்தில் புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு இசை அமைத்ததற்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











