Pushpa 2: ரிலீஸ்க்கு முன்னரே ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல்.. தவிடுபொடியான பாகுபலி ரெக்கார்ட்!

ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால் படம் பான் இந்தியா ஹிட் படமாக மாறியது. முதல் படத்தின் முடிவிலேயே இரண்டாவது படத்துக்கான லீட் கொடுக்கப்பட்டதால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், படம் ரிலீஸ்க்கு முன்னரே சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மைத்ரி மூவீஸ் தயாரிப்பில் சுகுமாறன் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் தெலுங்கு படமாக உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தினை ரசிகர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடியதால் படம் மாபெரும் ஹிட் படமாக மாறியது. மேலும் படத்தினை முடிக்கும்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டதால், ரசிகர்களும் செம த்ரில்லிங் மொமண்ட்டில் தியேட்டரைவிட்டு வெளியே வந்தனர்.

allu arjun rashmika mandanna pushpa 2 2

படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி அதாவது இன்னும் இரண்டு வார காலத்திற்குள் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தினை வரவேற்க காத்துக்கொண்டு உள்ளனர். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் புஷ்பா படத்தின் மூன்றாவது பாகம் இருப்பதாக கூறப்படுகின்றது

allu arjun rashmika mandanna pushpa 2 2

1000 கோடிகள்: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி படம் ரீலீஸ்க்கு முன்பே ரூபாய் 1,000 கோடிகளுக்கு மேல் வியாபரம் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் இதுபோல் ரிலீஸ்க்கு முன் எந்த இந்தியப் படமும் ஆயிரம் கோடிகள் வியாபாரம் செய்ததில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. மேலும் இது தொடர்பான பேச்சு இந்திய திரையுலகில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

allu arjun rashmika mandanna pushpa 2 2

தியேட்டர் வியாபாரம்: புஷ்பா 2 படத்தினைப் பொறுத்தவரையில் அல்லு அர்ஜுன் ரூபாய் 300 கோடிகள் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்தின் பிசினஸைப் பார்க்கும்போது, அடுத்த படங்களில் இவரது சம்பளம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. புஷ்பா 2 படத்தினைப் பொறுத்தவரையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூபாய் 220 கோடிகளுக்கு திரையரங்க உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வட இந்தியாவில் ரூபாய் 200 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூபாய் 50கோடிகளுக்கு திரையரங்க உரிமம் விற்பனை செய்யபப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ரூபாய் 30 கோடிகளுக்கும் கேரளாவில் ரூபாய் 20 கோடிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் ரூபாய் 140 கோடிகளுக்கு படம் வியாபாரம் செய்துள்ளது.

allu arjun rashmika mandanna pushpa 2 2

டிஜிட்டல் வியாபாரம்: மொத்தம் 660 கோடிகள் திரையரங்க உரிமத்திலேயே படம் வியாபரம் செய்து கொடுத்துள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தினை ரூபாய் 275 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. அதேபோல் சாட்டிலைட் சேனல் வியாபாரத்தில் படம் ரூபாய் 84 கோடிகள் வசூல் செய்துள்ளது எனவும் மியூசிக் ரைட்ஸில் ரூபாய் 67 கோடிகளுக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளது. மொத்தம் 1,086 கோடிகளுக்கு மேல் படம் ரிலீஸ்க்கு முன்னரே வியாபரம் செய்துள்ளதால், படக்குழு தற்போதே, லாபங்களை கணக்கிட்டு வருகின்றது. ரிலீஸ்க்குப் பின்னர் படத்தின் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் எனவும் படக்குழு நம்புகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X