இது வெறும் சாம்பிள் தான்.. மிரட்ட ரெடியான அல்லு அர்ஜுன்.. புஷ்பா டிரைலருக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!
ஹைதராபாத்; நடிகர் அல்லு அர்ஜுனின் பான் இந்திய திரைப்படமான புஷ்பா திரைப்படத்தின் டிரைலர் டீஸ் தற்போது வெளியாகி ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
டோலிவுட்டின் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் சமந்தாவின் ஸ்பெஷல் நடனத்துடன் புஷ்பா திரைப்படம் இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்த மாதம் படம் வெளியாக உள்ள நிலையில், வரும் டிசம்பர் 6ம் தேதி புஷ்பா படத்தின் டிரைலர் வெளியாகிறது.

டிரைலர் சாம்பிள்
வரும் டிசம்பர் 6ம் தேதி புஷ்பா படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில், தினமும் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து இந்தியளவில் ரசிகர்களை ஒன்று திரட்ட புஷ்பா படக்குழு பெரும் முயற்சியை செய்து வருகிறது. டிரைலர் டீஸ் என தற்போது புஷ்பா டிரைலரில் இருந்து வெளியாகி இருக்கும் சாம்பிளே வெறித்தனமாக இருக்கிறது.

ஆக்ஷனில் மிரட்டுறாரு
செம்மரக் கடத்தல் கதையை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இயக்குநர் சுகுமார் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அலா வைகுந்தபுரமுலோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கால்களுக்கு பின்னாலே ஓடிக் கொண்டிருக்கும் சாக்லேட் பாயாக நடித்த அல்லு அர்ஜுன் இந்த படத்தில் ஆக்ஷன் கிங்காக மாறி மிரட்ட உள்ளார்.

பாவாடையுடன் பைக்கில்
நடிகை ராஷ்மிகா மந்தனா இதற்கு முன் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக இந்த படத்தில் நடித்துள்ளது சமீபத்தில் வெளியான சாமி சாமி பாடல் மூலமே தெரியவந்த நிலையில், இந்த டிரைலர் டீஸிலும் குளித்து முடித்து விட்டு பாவாடை கட்டிக் கொண்டு பைக்கில் டிரிபிள்ஸ் போகும் காட்சி ரசிகர்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிக்க வைத்துள்ளது.
டிரைலர் எப்படி இருக்கும்
அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஒரு சூப்பரான ஐட்டம் பாடலுக்கு சமந்தா என நட்சத்திர பட்டாளமே மிரட்டியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் சாம்பிளே இப்படி இருக்கும் நிலையில், டிரைலர் எப்படி இருக்கும் என வெயிட்டிங்கில் வெறியேறி போய் ரசிகர்கள் டிசம்பர் 6க்காகவும் படம் வெளியாகும் நாளான டிசம்பர் 17க்காகவும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











