தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் அசத்தல் படம்.. டிரைலரிலும் இப்படி சாதனை படைச்சிருக்காமே!
ஐதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள அலா வைகுந்தபுரம்லோ படம் இன்னொரு சாதனையை படைத்துள்ளது.
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து ஜனவரியில் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹவுஸ்புல் காட்சி
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்பு வரை, ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், தனது கீதா ஆர்ட்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இது இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.

புட்ட பொம்மா
இதன் பாடல்கள் ஹிட்டாகி இருந்த நிலையில், இதில் இடம்பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். இந்தப் பாடல் யூடியூப்பில் 450 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.

இன்னொரு சாதனை
இப்படியொரு சாதனையை வேறு எந்த படமும் செய்யவில்லை என்பதால், படக்குழு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் இன்னொரு சாதனையையும் படைத்துள்ளது. ஐஎம்டிபி தளத்தில், அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படத்தின் டிரைலராக இதன் முன்னோட்டம் சாதனைப் படைத்துள்ளது.

கீதா ஆர்ட்ஸ்
இந்த வருடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தெலுங்கு படத்தின் டிரைலராகவும் இது இடம் பெற்றிருக்கிறது. இதை இந்தப் படத்தைத் தயாரித்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
Recommended Video

ராஷ்மிகா மந்தனா
நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படம் செம்மரக்கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.


Click it and Unblock the Notifications











