பாகுபலி-2 வை முந்திடுச்சாமே.. சத்தம் போடாமல் மற்றொரு சாதனை நிகழ்த்திய அல்லு அர்ஜுனின் அசத்தல் படம்!
சென்னை: அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள அலா வைகுந்தபுரம்லோ படம் சத்தமில்லாமல் மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹவுஸ்புல் காட்சி
த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் லாக்டவுனுக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. பல படங்களின் சாதனைகளை இந்தப் படம் உடைத்துள்ளதாகவும் பாகுபலி படத்துக்குப் பிறகு இந்தப் படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று தெலுங்கு சினிமா துறையினர் கூறி இருந்தனர்.

புட்டபொம்மா
லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இந்த படம் மீண்டும் திரையிடப்பட இருக்கிறது. அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த், தனது கீதா ஆர்ட்ஸ் மூலம் இதைத் தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் சூப்பர் ஹிட்டானது. யூடியூப்பில் அதிகம் பேர் பார்த்து ரசித்த தெலுங்கு பாடலாக, இது சாதனைப் படைத்துள்ளது.

பின்னுக்குத் தள்ளியது
இந்நிலையில், இந்தப் படம் வேறொரு சாதனையை சத்தம் போடாமல் படைத்துள்ளது. இந்தப் படம் கடந்த 16- ஆம் தேதியன்று டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதுவரையில் டிவியில் ஒளிபரப்பான படங்களிலேயே அதிக ரேட்டிங்கைப் பிடித்த படம் என்ற சாதனையை, அலா வைகுந்தபுரம்லோ செய்துள்ளது. ரேட்டிங்கில் முந்தைய பட சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
Recommended Video

சரிலேறு நீக்கெவரு
மகேஷ்பாபு நடித்து இந்தப் படத்துடன் ரிலீஸ் ஆன, சரிலேறு நீக்கெவரு படம்தான் இதுவரையிலும் டாப் ரேட்டிங்கைப் பிடித்து முதலிடத்தில் இருந்தது. இப்போது அது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ராஜமவுலியின் பாகுபலி 2 படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதை அல்லு அர்ஜூன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











