அல்லு அர்ஜூனின் அலப்பறை ஆரம்பம்.. ஓடிடியில் மாஸ்காட்ட வரும் புஷ்பா 2.. எந்த தளத்தில் தெரியுமா?
சென்னை:அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2: தி ரூல் படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி இருந்தார். இப்படம், பான் இந்திய திரைப்படமாக பல மொழிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
2021ம் ஆண்டு வெளியனா புஷ்பா: தி ரைஸ் படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அந்த படத்தில் கதைக்களம் அல்லு அர்ஜூனின் நடிப்பு, சமந்தா, ராஷ்மிகாவின் டான்ஸ் என படம் பட்டையை கிளப்பியது. படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மூன்று வருடமாக நடைபெற்று வந்தது. முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா எப்படி, பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புகிறான் என்பது கதைக்களமாக காட்டப்பட்டது. இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்று சொல்லப்பட்டது.

வசூல் சாதனை: இதையடுத்து. புஷ்பா 2 திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்ததாக தயாரிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்த நிலையில், 11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி வசூல் செய்தது. இப்படம் உலக அளவில் 1800கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
புஷ்பா 2: வசூல் வேட்டை நடத்திய புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர் பார்த்து இருந்த நிலையில்,தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜனவரி 30 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. படம் தியேட்டரில் பார்த்ததை விட படம் 3 மணிநேர 44 நிமிடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பிரத்யேக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து பல மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











