இந்தாங்க இதுதான் மெகாஹிட் ‘புட்ட பொம்மா’ உருவான விதம்.. வைரலாகும் டான்ஸ் மாஸ்டர் வெளியிட்ட வீடியோ

By

சென்னை: சூப்பர் ஹிட்டாகி இருக்கும் 'புட்ட பொம்மா' பாடலின் உருவாக்கம் குறித்த வீடியோவை, அதன் நடன இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

வீட்டில் video Games விளையாடும் Vijay Devarkonda | Arjun Reddy with beer Bottle

தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.

பூஜா ஹெக்டே ஹீரோயின். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 புட்ட பொம்மா

புட்ட பொம்மா

த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இதன் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், 'புட்ட பொம்மா' பாடல் மெகா ஹிட்டானது. யூ டியூப்பில் இந்த பாடல் சாதனை படைத்தது. இதன் நடன அமைப்பும் பரபரப்பாகக் கவனிக்கப்பட்டது.

 டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

இதன் நடனத்தை ஜானி அமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் பாடல் யூடியூப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 151 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. இந்தப் பாடல் இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் அவர் மனைவியும் டிக் டாக்கில் ஆடியிருந்தனர்.

 திட்டமிடப்பட இல்லை

திட்டமிடப்பட இல்லை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரிச்சர்ட்சனும் டிக் டாக்கில் இந்த பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி உட்பட பல பிரபலங்களும் இந்த பாடலுக்கு டிக் டாக் வீடியோவில் ஆடியிருந்தனர். இந்நிலையில் இந்தப் பாடலை ஆரம்பத்தில் திட்டமிடப்படவே இல்லை என்றும் வெறும் 3 நாட்களில் இந்தப் பாடலுக்காக இசையை உருவாக்கினேன் என்றும் கூறி இருந்தார் இசையமைப்பாளர் தமன்.

 ஸ்பெஷல் வீடியோ

ஸ்பெஷல் வீடியோ

இதற்கிடையே இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த பாடலுக்கான வரவேற்பைக் கண்டு மிரண்டுவிட்டேன். என்னால் நடனம் அமைக்கப்பட்ட அல்லு அர்ஜூனின் டான்ஸ் சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகிறது. இதற்கிடையே, இந்த பாடலின் பிஹைண்ட் த ஷூட் - ஸ்பெஷல் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X