ஹிட்டான புட்ட பொம்மா பாடல் டீசர்.. அல்லு அர்ஜுனின் கலக்கல் நடனம்!
சென்னை: அல்லு அர்ஜுன் நடித்த புட்ட பொம்மா என்ற பாடலின் டீசர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த படம் சங்கராந்திக்கு வெளியாக உள்ளது.
அல்லு அர்ஜுன் நடனத்திற்கே தனி ரசிகர்கள் உண்டு அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வெளியாக போகும் படம் தான் 'அல வைக்குந்தாபுராமுலு ' இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரிதும் பரப்பாக பேசப்பட்டது. இந்த டீசரை பார்க்கும் காதல் கலந்த ஒரு குடும்ப சென்டிமென்ட் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் இருந்து புட்ட பொம்மா என்ற பாடலின் டீசர் வெளியாகி தற்போது ட்ராண்டாகி உள்ளது. இந்த பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இடம் பெற்று உள்ளனர் . ஒரு காதல் பாடலாக இந்த பாடல் உருவாகி இருக்கிறது . இந்த பாடலின் செட் மிக அழகாக வடிவமைக்கபட்டு இருக்கிறது சில இடங்களில் பார்க்க ரௌடி பேபி பாடலின் செட் போல தெரிஞ்சாலும் பாடல் மிகவும் அருமை இருக்கிறது.
அர்ஜுன் பாடல்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனி கிரேஸ் உண்டு ஏனெனில் அவர் பல கடினமான அசைவுகளை மிக எழுதில் ஆடி அசத்தும் வல்லமை படைத்தவர். இவரின் நடன அசைவுகள் மிக நேர்த்தியாக இருக்கும் இவரின் படங்களுக்காக நடன இயக்குனர்கள் நேர்த்தியான அசைவுகளை தேர்ந்தெடுப்பார்கள் .
அல்லு அர்ஜுன் புட்ட பொம்மா பாடலில் இவரின் ஸ்டைலிலே நடனமாடிருக்கிறார் . இப்படத்திற்கு எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். த்ரி விக்ரம் இப்படத்தை இயக்கி உள்ளார்.
அல்லு அர்ஜுன் மற்றும் த்ரிவிக்ரம் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன் ஜீலை மற்றும் சன் ஆப் சத்யமூர்த்தி ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் இவ்விரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்ற படங்கள் ஆகும் . அந்த இருபடங்களை போல இந்த படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்க படுகிறது .
இந்த படத்தில் தமிழ் நடிகையான நிவேதா பேதுராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார் . இதற்கு முன் மூன்று தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார் நிவேதா பேதுராஜ் .
அல வைகுந்தாபுராமுலு படம் வரும் சங்காரந்திக்கு வெளியாகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே , நிவேதா பேதுராஜ் , தபு , ராஜேந்திர பிரசாத் ,ஜெயராம் ,சமுத்திரகனி ஆகியோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











