ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை.. அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

மும்பை: உலகம் முழுவதும் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மற்றும் அவரது மகள்கள் போட்ட நடன ரீல் வேற லெவலில் டிரெண்டானது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் புஷ்பா படத்தின் ஓ அன்ட்டாவா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ போட அதற்கு அல்லு அர்ஜுனும் கமெண்ட் செய்துள்ளார்.

ஓ சொல்றியா மாமா

ஓ சொல்றியா மாமா

நடிகர் தனுஷின் கொலவெறி, ரவுடி பேபி பாடல்கள் மற்றும் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் ஒத்து பாடல்கள் உலகம் முழுக்க ரசிகர்களை நடனமாட வைத்த நிலையில், தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா உலகம் முழுக்க ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் நடனமாடப்பட்டு வருகிறது.

பல மில்லியன் பார்வைகள்

பல மில்லியன் பார்வைகள்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ள அந்த பாடல் பல மில்லியன் வியூஸ்களை அள்ளி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. தெலுங்கு பாடலான ஓ அன்டாவா பாடல் 91 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தமிழ் பாடல் 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்தி பாடல் 69 மில்லியன் வியூஸ்களை அள்ளி உள்ளது.

சமந்தாவுக்கு ஜாக்பாட்

சமந்தாவுக்கு ஜாக்பாட்

ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாட யோசித்த சமந்தாவுக்கு புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடல் தந்த ஹிட் காரணமாக தெலுங்கு மற்றும் இந்தியில் ஏகப்பட்ட ஐட்டம் நம்பருக்கு நடனமாடும் வாய்ப்புகள் நடிகை சமந்தாவுக்கு குவிந்து வருகிறதாம். ஒரு பாடலுக்கு நடனமாட பல கோடி ரூபாய்கள் கிடைப்பதால் அவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளாராம்.

ஸ்ரத்தா தாஸ் நடனம்

பாலிவுட்டிலும் புஷ்பா திரைப்படம் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், பாலிவுட் நாயகியாக ஷ்ரத்தா தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓ அன்ட்டாவா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். இணையத்தில் தற்போது ஷ்ரத்தா தாஸ் நடனமாடிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் கமெண்ட்

அல்லு அர்ஜுன் கமெண்ட்

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகை ஷ்ரத்தா தாஸ் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடியுள்ள நிலையில், அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் " 100th stage of hallucinations" என கமெண்ட் போட்டு ஃபயர் எமோஜிக்களை தெறிக்கவிட்டுள்ளார். அல்லு அர்ஜுனிடம் ரசிகர்கள் புஷ்பா 2 பட அப்டேட்டையும் கேட்டு வருகின்றனர்.

பிகினி பேபி

பிகினி பேபி

சித்து ஃப்ரம் சிக்காகுலம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷ்ரத்தா தாஸ். அல்லு அர்ஜுனின் ஆர்யா 2, பிரபாஸின் டார்லிங் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஸித், கிரேட் கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா தாஸ் இன்ஸ்டாகிராமில் பிகினியில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X