ஃபிளவர் இல்லை ஃபயரு.. புஷ்பா 2 லுக்கில் தாறுமாறாக மிரட்டும் அல்லு அர்ஜுனின் லேட்டஸ்ட் க்ளிக்!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம் இசைக்காக இசையமைப்பாளர் தமனுக்கு தேசிய விருது கிடைத்தது.
புஷ்பா படத்திற்காக என்ன என்ன விருதுகள் அடுத்த ஆண்டு கிடைக்கும் என தெரியவில்லை. இந்நிலையில், புஷ்பா 2 படத்திற்காக பக்காவாக ரெடியாகி வருகிறார் அல்லு அர்ஜுன்.
ரசிகர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள சூப்பரான லேட்டஸ்ட் க்ளிக் போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

புரட்டி எடுத்த புஷ்பா
அலா வைகுந்தபுரமுலோ திரைப்படத்தில் அத்தனை ஹேண்ட்ஸம் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுன் அப்படியே செம்மரக் கடத்தல்காரனாக புஷ்பா படத்திற்காக ஒட்டுமொத்தமாக மாறி நடித்திருந்தார், ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி எடுத்த புஷ்பா திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 350 கோடிக்கும் அதிகமாக அந்த படம் வசூல் செய்து அபார சாதனை படைத்தது.

புஷ்பா தி ரூல்
புஷ்பா தி ரைஸ் படத்தில் சாதாரண கூலி எப்படி டான் ஆக மாறுகிறான் என்கிற கதையை மிரட்டலாக எடுத்திருந்தார். புஷ்பா தி ரூல் படத்தில் புஷ்பாவின் ராஜ்ஜியம் மற்றும் அவனை காலி செய்யத் துடிக்கும் எதிரிகள் என படம் படு மிரட்டலாக 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3 வில்லன்கள்
ஏற்கனவே பகத் ஃபாசில் உள்ள நிலையில், விஜய்சேதுபதி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களும் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு எதிராக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என்கிற பக்கா பிளான்களை போட்டு வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன் என்றும் கூறுகின்றனர்.

ஃபிளவர் இல்லை ஃபயரு
கருப்பு சட்டையை அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபிளவர் இல்லை ஃபயரு என அந்த போட்டோவை பார்த்ததும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர். புஷ்பா 2 படத்தின் திரைக்கதையில் மேலும், பிரம்மாண்டத்தை கொண்டு வந்து இருப்பதாகவும், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களுக்கு கடும் டஃப் கொடுக்கும் அளவுக்கு புஷ்பா 2 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











