லாரி டிரைவர்.. ராஷ்மிகா மந்தனா ஜோடி.. தாடியுடன் சுற்றும் ஹீரோ.. பரபரக்குது டோலிவுட்!

ஹைதராபாத்: டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் அடுத்த பட லுக் சமூக வலைதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு வந்த அல்லு அர்ஜுன், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளில் வெறும் 19 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

ஆர்யா, ஆர்யா 2 சரைனோடு, ரேஸ் குர்ராம், சன் ஆஃப் சத்யமூர்த்தி, பத்ரிநாத், வருடு என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ஸ்டைலிஷ் ஸ்டார்

ஸ்டைலிஷ் ஸ்டார்

உலகளவில் ஸ்டைலான சினிமா நட்சத்திரம் என்றாலே அது சூப்பர்ஸ்டார் தான். ஆனால், டோலிவுட் இளைஞர்களிடம் ஸ்டைலிஷ் ஸ்டார் யார் என கேட்டால், அல்லு அர்ஜுன் பெயரைத்தான் சொல்வார்கள். நடிப்பது, நடனம் ஆடுவது ஏன் சண்டை செய்தாலும், அதிலும் தனது ஸ்டைலை கெத்தாக காட்டி வருகிறார்.

ஆரம்பமே அமர்களம்

ஆரம்பமே அமர்களம்

2020ம் ஆண்டு துவக்கத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ படம் 250 கோடிக்கும் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், சமுத்திரகனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வைரலாகும் புது லுக்

வைரலாகும் புது லுக்

இந்நிலையில், அல்லு அர்ஜுனின் 20வது படத்தின் புதிய லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட முடி, அடர்த்தியான தாடியுடன் தொப்பி அணிந்தபடி அல்லு அர்ஜுன் இருக்கும் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மொபைல் டிபிக்களாகவும், பைக் போஸ்டர்களாகவும் வைத்து வருகின்றனர்.

டில்லி கெட்டப்

டில்லி கெட்டப்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் டில்லி எனும் லாரி டிரைவர் ரோலில் கார்த்தி அசத்தியிருந்தார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தில் லாரி டிரைவராக அவர் நடிக்க உள்ளார். அதற்காகத்தான் இந்த தாடி கெட்டப்பாம்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவரு படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தான் அல்லு அர்ஜுனின் 20வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி வில்லன்

விஜய்சேதுபதி வில்லன்

இந்த படத்திற்காக சித்தூர் வட்டார வழக்கை அல்லு அர்ஜுன் கற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இதுவரை அல்லு அர்ஜுன் 20வது படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X