அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 லுக்... படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நாயகன்

முன்னணி நாயகன்

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது சிறப்பான கதைத்தேர்வு, படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்கள் உள்ளிட்டவை இவரை முன்னணி ஹீரோவாக வைத்துள்ளது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் புஷ்பா. இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வழக்கத்திற்கு மாறாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன்.

கதைக்களமான மரக்கடத்தல்

கதைக்களமான மரக்கடத்தல்

இந்தப் படம் மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் பகத் பாசில் வில்லனாகவும் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் அல்லு அர்ஜூனுக்கு ஈடுகொடுத்து நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

குறிப்பாக சாமி பாடல், ஊ சொல்றியா மற்றும் ஸ்ரீவள்ளி பாடல்கள் பட்டையை கிளப்பின. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் படம் சிறப்பான வசூலை பெற்றது. இதையடுத்து அல்லு அர்ஜூன் பான் இந்தியா நாயகனாக மாறியுள்ளார். குறிப்பாக இந்தியில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

புஷ்பா 2 புதிய லுக்

புஷ்பா 2 புதிய லுக்

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் படத்திற்கான ரிலீசை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி அவரது புதிய கெட்டப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் புஷ்பா 2 படத்தில் அவரது புதிய லுக் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X