புஷ்பா2 பட லுக்குடன் புகைப்படம் வெளியிட்ட அல்லு அர்ஜுன்.. ப்பா.. எவ்ளோ கரடுமுரடா இருக்காரு!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது புஷ்பா படம்.

இந்தப் படம் அல்லு அர்ஜுனின் கேரியரில் சிறப்பான படமாக அமைந்தது. வசூல்மழை பொழிந்தது.

சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது இரண்டாவது பாகத்திற்கு தயாராகி வருகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது புஷ்பா படம். இந்தப்படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலையும் அள்ளியது. உலகளவில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலித்தது.

புஷ்பா 2 படம்

புஷ்பா 2 படம்

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்பட உள்ளது. முதல் பாகத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே இந்தப் படம் இரண்டு பாகங்களில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் சுகுமார் தெரிவித்திருந்தார். மரக்கடத்தலை மையமாக கொண்டு கேங்ஸ்டர் படமாக இந்தப் படம் வெளியானது.

 ஆகஸ்ட்டில் சூட்டிங்

ஆகஸ்ட்டில் சூட்டிங்

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக களமிறங்கியுள்ளார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

மேலும் படம் ராஜமௌலி படங்களுக்கு இணையான பிரம்மாண்டத்துடன் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் கடந்த மார்ச் மாதத்திலேயே துவங்கவிருந்த இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது தள்ளிப் போயுள்ளது. இதற்கான திரைக்கதையை சுகுமார் தற்போது சிறப்பாக வடிவமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரூ.350 கோடி பட்ஜெட்

ரூ.350 கோடி பட்ஜெட்


தற்போது உருவாகவுள்ள புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் மட்டுமே 350 கோடி என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு தரப்பு மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் முழுமூச்சில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

 அல்லு அர்ஜுன் லுக்

அல்லு அர்ஜுன் லுக்

இந்தப் படத்தின் முதல் பாகத்திலேயே அல்லு அர்ஜுனின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அலா வைகுந்தபுரமுலு படத்தில் ஸ்டைலிஷ்ஷாக காட்சியளித்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் மரம் கடத்துபவராக, கேங்ஸ்டராக சிறப்பாக நடித்திருந்தார். அதற்கேற்ப அவரது லுக் சிறப்பாக அமைந்தது.

கரடுமுரடான லுக்

கரடுமுரடான லுக்

இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தின் அடுத்த பாகத்திற்காக தயாராக உள்ளார் அல்லு அர்ஜுன். தற்போது தன்னுடைய மனைவியுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இந்த லுக் வெளிப்பட்டுள்ளது. மிகவும் கரடுமுரடாக இந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறார். முதல் பாகத்தை காட்டிலும் அதிகமான தாடி, தலைமுடியுடன் இந்த புதிய லுக் அவர் தோற்றமளிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X