ஒடிடியில் வெளியானது புஷ்பா.. யூடியூபில் வெளியானது ஓ சொல்றியா மாமா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய நிலையில், தற்போது அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் ரசிகர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற நடிகை சமந்தாவின் "ஓ சொல்றியா மாமா" பாடலும் யூடியூபில் வெளியாகி லட்சக் கணக்கான பார்வைகளை அள்ளி வருகிறது.

ஆதித்யா மியூசிக் யூடியூப் தளத்தில் புஷ்பா படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

ஒடிடியில் வெளியான புஷ்பா

ஒடிடியில் வெளியான புஷ்பா

கடந்த டிசம்பர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியான நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் ஜனவரி 7ம் தேதி இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் ட்வீட்

அல்லு அர்ஜுன் ட்வீட்

இரு பாகங்களாக உருவாகி உள்ள புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு புஷ்பா தி ரூல் எனும் இரண்டாம் பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமேசான் பிரைமில் புஷ்பா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கண்டு களியுங்கள் என தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

இந்த சீன் தியேட்டரில் வரல

இந்த சீன் தியேட்டரில் வரல

தணிக்கை குழுவால் கத்தரிக்கப்பட்ட சில காட்சிகளும், தணிக்கைக்குப் பிறகு படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளும் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் எந்த ஒரு 'கட்'டும் இன்றி இடம்பெற்று இருப்பதாக சில சீன்களை குறிப்பிட்டு இந்த சீன் தியேட்டரில் இல்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஓ சொல்றியா பாட்டு ரிலீஸ்

சமந்தாவின் குத்தாட்டம் மற்றும் ஆண்ட்ரியாவின் மெய் சிலிர்க்க வைக்கும் குரல் அடங்கிய ஓ சொல்றியா மாமா பாடலின் முழு வீடியோவும் தற்போது ஆதித்யா மியூசிக் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி டிரெண்டாகி வருகிறது. சமந்தாவின் அட்டகாசமான நடனத்தையும் கவர்ச்சியையும் கண்டு ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X