ஆரம்பமே சென்டிமென்ட்ல அள்ளுதே.. ஸ்டைலிஷ் ஸ்டார் பட போஸ்டர் இப்படியொரு சாதனையை படைச்சிருக்காம்ல!
சென்னை: ஸ்டைலிஷ் ஸ்டார் பட போஸ்டர், ட்விட்டரில் இப்படியொரு சாதனையை படைத்துள்ளது.
Recommended Video
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.
இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.
லாரி டிரைவர்
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. வசூலிலும் சாதனை படைத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், புஷ்பராஜ் என்ற லாரி டிரைவராக நடிக்கிறார். அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

வித்தியாச கெட்டப்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியான அன்றே பரபரப்பானது. இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது என்று கூறப்படுகிறது. அதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ட்விட்டரில் சாதனை
விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் வன அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்துக்கு அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. குறுகிய நேரத்தில் அதிக லைக்ஸ்களை ட்விட்டரில் பெற்ற போஸ்டராக, இது சாதனை படைத்துள்ளது.

ஒரு போஸ்டர்
ஒரு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் அதிகமான லைக்ஸ்களை அள்ளுவது வழக்கமானதுதான். ஆனால், ஒரு படத்தின் போஸ்டர் இந்தளவுக்கு லைக்ஸ்களை குவித்தது இதுதான் முதன்முறை. படத்தின் பர்ஸ்ட் லுக்கே, இப்படியொரு சாதனையை படைத்திருப்பதால், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இதை சென்டிமென்டாக பார்க்கின்றனர். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











