செம பர்த்டே ட்ரீட்.. சும்மா தெறிக்குது அல்லு அர்ஜுனின் புஷ்பா ஃபர்ஸ்ட் லுக்.. டிரெண்டாகும் #Pushpa
ஹைதராபாத்: ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுனின் 37வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
தென்னிந்தியா முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், பிறந்த நாள் ஹாஷ்டேக்குகள் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன.
தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் அல்லு அர்ஜுன், அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பர்த்டே ட்ரீட்
டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக தனது அடுத்த படமான புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு செம பர்த்டே ட்ரீட் கொடுத்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா
பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். கடந்த ஜனவரி மாதம் வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வரு படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.
டிரெண்டாகும் புஷ்பா
லாரி டிரைவர் ரோலில் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். அதற்காக நீண்ட முடி மற்றும் தாடி வளர்த்து வருகிறார். புஷ்பா என்கிற டைட்டில் மற்றும் அல்லு அர்ஜுனின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி உள்ள நிலையில், ட்விட்டரில் வேற லெவலில் #Pushpa ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பான் இந்தியா
அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கு இந்தியளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில், அல்லு அர்ஜுனின் 20வது படமான புஷ்பா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க புஷ்பா படக்குழு முடிவு செய்துள்ளது.
புஷ்பராஜ்
புஷ்பா என்பது படத்தில் நாயகியின் பெயர் அல்ல என்றும், புஷ்பராஜ் என்ற நாயகனின் கதாபாத்திர பெயர் தான் சுருக்கமாக புஷ்பா என வைக்கப்பட்டுள்ளதாகவும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த படத்திற்காக லோக்கல் ஸ்லாங் ஒன்றை அல்லு அர்ஜுன் கற்றுக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











